சிஞ்ச் ஃப்யூல்

தனியுரிமைக் கொள்கை

உங்கள் தனியுரிமை எங்களுக்கு மிகவும் முக்கியமானது

  • ஹோம்
  • /
  • தனியுரிமைக் கொள்கை

அறிமுகம்

சிஞ்ச் ஃப்யூலின் (”எங்களை” அல்லது ”எங்கள்” அல்லது ”நாங்கள்”) வலைத்தளம் (”வலைத்தளம்”) மற்றும் மொபைல் செயலிக்கு (”மொபைல் செயலி”) வரவேற்கிறோம். நாங்கள் சிஞ்ச் ஃப்யூல் என்ற வணிகப்பெயரில் இயங்குகிறோம். எங்களது வலைத்தளம் மற்றும் மொபைல் செயலியின் மூலம், டீசல் மற்றும் எரிபொருட்களை, ஆன் – டிமாண்டில் நாங்களோ அல்லது எங்கள் துணை நிறுவனங்கள் அல்லது இணைப்பு நிறுவனங்கள் அல்லது மூன்றாம் தரப்பு சேவை வழங்குநர்கள் மூலமோ டெலிவரி செய்யும் சேவையை அளிக்கிறோம் (”சேவை”).

எங்கள் வலைத்தளத்தையும் மொபைல் செயலியையும் (”பயனர்கள்”) பயன்படுத்தும் உங்களைப்போன்றவர்களின் தனியுரிமை குறித்து நாங்கள் அக்கறை கொள்கிறோம். நீங்கள் எங்களிடம் அளிக்கும் தகவல்களை நாங்கள் மதிக்கிறோம்; நாங்கள் அந்தத் தகவல்களை எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதை நீங்கள் மிகச்சரியாக, முழுமையாக புரிந்துகொண்டிருக்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள விரும்புகிறோம். (இணைப்பில்) அளிக்கப்பட்டுள்ள சேவைகளுக்கான விதிமுறைகளை ஏற்றுக்கொள்வதன் மூலம், நீங்கள் இந்த தனியுரிமைக் கொள்கைக்கும் (”தனியுரிமைக் கொள்கை”) ஒப்புக்கொள்கிறீர்கள்.

சேவைகளைப் பயன்படுத்துவதன் மூலம் தனிப்பட்ட முறையில் அடையாளம் காணக்கூடிய தகவல்களையும் மற்றும் எங்கள் தனியுரிமை கொள்கையில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள மொத்தத் தரவையும் சேகரிப்பதற்கும் பயன்படுத்துவதற்கும், டிஸ்க்ளோஸ் செய்வதற்கும் மற்றும் தனிப்பட்ட முறையில் அடையாளம் காணக்கூடிய உங்களது தகவல்களை சேகரித்து, பயன்படுத்தி, இந்தியாவிற்கு ட்ரான்ஸ்ஃபர் செய்வதற்கும் செயல்முறைக்கு உட்படுத்தவும் நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள் என்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள்.

பாதுகாப்பு

உங்களது தனிநபர் தகவல்களின் நேர்மையையும் பாதுகாப்பையும் பேணுவதற்கும் உங்களது தனியுரிமை அமைப்புகளைச் செயல்படுத்தவும் வணிகரீதியாகப் பொருத்தமான பிஸிக்கல், நிர்வாகம் சார்ந்த மற்றும் தொழில்நுட்ப safeguardsகளை சிஞ்ச் ஃப்யூல் பயன்படுத்துகிறது. இருப்பினும், எங்களது பாதுகாப்பு அம்சங்களை அங்கீகாரமற்ற மூன்றாம் தரப்பினரால் எச்சமயத்திலும் மீறமுடியாது அல்லது அவர்களால் உங்களது தனிநபர் தகவல்களை முறையற்ற நோக்கங்களுக்குப் பயன்படுத்தமுடியாது என்று நாங்கள் உத்தரவாதம் அளிக்கமுடியாது.

எங்கள் செயலியைப் பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய இழப்பை, திருட்டை, தவறான பயன்பாட்டை, அங்கீகாரமற்ற அணுகலை, டிஸ்க்ளோஸ் செய்வதை, மாற்றம் செய்வதை, அழிப்பதை, துன்புறுத்துவதை மற்றும் தவறாகப் பயன்படுத்துவதைக் குறைப்பதற்கு நாங்கள் விரும்புகிறோம். ஆனால், அதில் முழுநிறைவை எங்களால் உத்தரவாதம் செய்யமுடியாது. மேலே குறிப்பிட்ட ஏதோவொன்று நடந்ததற்கான தெளிவான ஆதாரம் இருந்தால், உடனடியாக எதிர்வினையாற்ற எங்களாலியன்ற அனைத்தையும் செய்வோம். உங்களது சொந்த ரிஸ்கில் தான் உங்களது தனிநபர் விவரங்களை நீங்கள் அளிக்கிறீர்கள் என்பதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்கள்.

இந்தத் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ள தகவல்களையும் நாங்கள் வேறு இடத்திற்கு ட்ரான்ஸ்ஃபர் செய்யலாம்; இந்தியாவிலோ மற்றும் வேறு நாடுகளிலோ செயல்முறைக்கு உட்படுத்தலாம் மற்றும் சேமித்து வைக்கலாம்; அந்நாடுகள் சிலவற்றில், நீங்கள் வசிக்கும் பிரதேசத்தைவிடக் குறைவான பாதுகாப்புடன் கூடிய, தரவு பாதுகாப்பு சட்டங்கள் இருக்கலாம். அவ்வாறு இருக்கும் நிலையில், இந்த தனியுரிமைக் கொள்கையின் அடிப்படையில் உங்களது தனிநபர் தகவல்களைப் பாதுகாப்பதற்குப் பொருத்தமான நடவடிக்கைகளை நாங்கள் எடுப்போம்.

பணித்தள அனுமதி:

உங்களுடைய ஒப்புதலின்றி செயலிகள் அவற்றை அணுகமுடியாத வகையில் பெரும்பாலான iOS, ஆண்ட்ராய்ட் போன்ற செல்பேசி பணித்தளங்கள் (”பணித்தளங்கள்”) சில வகை டேட்டா டிவைஸ்களை வரையறுத்துள்ளன. மேலும் இந்தப் பணித்தளங்கள், உங்களுடைய ஒப்புதலைப் பெறுவதற்கு வேறுபட்ட அனுமதி முறைகளைக் கொண்டுள்ளன. நீங்கள் செயலியை நிறுவுவதற்கு முன்னதாகவோ அல்லது செயலியைப் பயன்படுத்துவதற்கு முன்னதாகவே, ஆண்ட்ராய்டு டிவைஸ்கள் மொபைல் செயலி கேட்கும் அனுமதிகள் குறித்து உங்களுக்குத் தெரிவிக்கும். நீங்கள் அந்தச் செயலியைப் பயன்படுத்துவது, நீங்கள் உங்களுடைய ஒப்புதலை உருவாக்குகிறது.

தகவல் சேகரிப்பு

சிஞ்ச் ஃப்யூல் உங்களைப்பற்றிய தகவல்களை, நீங்கள் எங்களது சேவைகளைப் பயன்படுத்தும்போதும், மற்ற பரிமாற்றங்கள் மற்றும் தகவல் தொடர்புகளின் மூலமும் சேகரிக்கிறது. நீங்கள் எங்களிடம் நேரிடையாக அளிக்கும், அதாவது, நீங்கள் உங்களுக்கான கணக்குகளை உருவாக்கும்போதும் அல்லது அதில் மாற்றங்கள் செய்யும்போதும், ஆன்–டிமாண்ட் சேவைகளை வேண்டும்போதும், வாடிக்கையாளர் உதவியைத் தொடர்பு கொள்ளும்போதும், அல்லது வேறு எதற்காவது எங்களுடன் தொடர்பு கொள்ளும்போதும் உங்களது தகவல்களை நாங்கள் சேகரிக்கிறோம். நீங்கள் அளிக்க விரும்பும் தகவல்களில் பெயர், மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண், அஞ்சல் முகவரி, சுயவிவரத்துடன் இணைக்கப்படும் புகைப்படம், கோரும் பொருட்கள் மற்றும் அவற்றின் அளவு, டெலிவரி தொடர்பான குறிப்புகள் ஆகியன இருக்கக் கூடும். தேவையெனில் நீங்கள் பிரிவு 6.2 ஐ சரிபார்த்துக் கொள்ளலாம்.

நீங்கள் எங்கள் சேவைகளைப் பயன்படுத்தும்போது, பின் குறிப்பிடப்படும் பொதுவான வகைகளிலும் தகவல்களை நாங்கள் சேகரிக்கிறோம்,

தனிநபர் தகவல்கள்: நீங்கள் எங்களுடன் ஓர் இலவச கணக்கை ஏற்படுத்தும்போது தனிப்பட்ட முறையில் அடையாளம் காணக்கூடிய உங்களது தகவல்களை ( மின்னஞ்சல் முகவரி, பெயர், தொலைபேசி எண் போன்றவை) நாங்கள் சேகரிக்கிறோம். பதிவு செய்யப்பட்ட உறுப்பினராக இல்லாமல், எங்களது வலைத்தளம் மற்றும் மொபைல் செயலியின் சில பகுதிகளில் நீங்கள் உலாவலாம். ஆனால், (ஆர்டர் கொடுப்பது போன்ற) சில செயல்களுக்குப் பதிவு தேவைப்படுகிறது. உங்களது முந்தைய ஆர்டர்கள் மற்றும் ஆர்வங்களின் அடிப்படையில் சில ஆஃபர்களை உங்களுக்கு அனுப்ப உங்களது தொடர்புத் தகவல்களை நாங்கள் பயன்படுத்த வேண்டியிருக்கும்.

நிதி தகவல்: நீங்கள் எங்களுடன் பரிவர்த்தனையில் ஈடுபட்டிருக்கும்போது, சில கூடுதல் தகவல்களை, பில்லிங் முகவரி, கடன்/டெபிட் அட்டைகளின் எண், மற்றும் இந்தக் கடன்/டெபிட் அட்டைகள் காலாவதியாகும் தேதி, மற்றும்/ அல்லது பணம் செலுத்துவதற்குப் பயன்படுத்தப்படும் வேறு இன்ஸ்ட்ருமெண்ட்களின் விவரங்கள் மற்றும் ட்ராக்கிங் (tracking) தகவல்களையும் நாங்கள் சேகரிக்கிறோம்.

இருப்பிடத் தகவல்: நீங்கள் சேவைகளை பயன்படுத்தும்போது, வாகனம்/எரிபொருள் கொள்கலன் எந்த இடத்தில் உள்ளது என்பது பற்றிய துல்லியமான இருப்பிடத் தகவலை, பயனர் பயன்படுத்தும் மொபைல் செயலியிலிருந்து நாங்கள் சேகரிக்கிறோம், உங்களது மொபைல் பணித்தளம் பயன்படுத்துகிற அனுமதி அமைப்புமுறையின் வழியாக இருப்பிட சேவைகளை அணுக மொபைல் செயலிக்கு நீங்கள் அனுமதி கொடுத்தால், மொபைல் செயலி முன்னணியிலும் பின்னணியிலும் ஓடிக்கொண்டிருக்கும் போது, உங்கள் device இருக்கும் இடத்தைச் சரியாக அறிந்து எங்களால் சேகரிக்க முடியும். உங்களது IP முகவரியின் மூலமும் உங்களது இருப்பிடத் தகவலை நாங்கள் தோராயமாக பெறமுடியும்.

பரிவர்த்தனை தகவல்: எங்களது சேவைகளை நீங்கள் பயன்படுத்துவது தொடர்பான பரிவர்த்தனைத் தகவல்களை, அதாவது எந்த வகையான சேவை கோரப்பட்டது, அந்தச் சேவை வழங்கப்பட்ட தேதி மற்றும் நேரம், வசூலிக்கப்பட்ட கட்டணம், வழங்கப்பட்ட பொருள் மற்றும் வேறு தொடர்புடைய பரிவர்த்தனை விவரங்களை நாங்கள் சேகரிக்கிறோம், கூடுதலாக, உங்களது Promotion codeஐ வேறு யாராவது பயன்படுத்துகிறார் என்றால், அந்த நபருடன் உங்களது பெயரை நாங்கள் இணைப்போம்.

டிவைஸ் தகவல்: உங்கள் மொபைல் சாதனம் தொடர்பான தகவல்களை, எடுத்துக்காட்டாக, ஹார்டவேர் மாடல், இயக்க முறைமை மற்றும் அதன் version, மென்பொருள் மற்றும் கோப்புகளின் பெயர்கள் மற்றும் அவற்றின் version, விரும்பிய மொழி, தனிப்பட்ட டிவைஸ் identifier, விளம்பர identifier, வரிசை எண், டிவைஸ் motion தகவல் மற்றும் மொபைல் நெட்வொர்க் தகவல் போன்றவற்றையும் நாங்கள் சேகரிக்கிறோம்.

அழைப்பு மற்றும் குறுஞ்செய்தி டேட்டா: பயனர்களுக்கும் எங்களது டெலிவரி ஓட்டுநர்களுக்கும் (”ஓட்டுநர்”) இடையில் தகவல் பரிமாற்றத்தை எங்கள் சேவைகள் எளிதாக்குகின்றன. இந்தச் சேவையை எளிதாக்கும் வகையில், அழைப்பு அல்லது குறுஞ்செய்தியின் தேதி மற்றும் நேரம், தொடர்புடைய நபர்களின் தொலைப்பேசி அழைப்புகள், அந்தக் குறுஞ்செய்தியில் இருந்த செய்தி உள்ளிட்ட call dataவை நாங்கள் சேகரிக்கிறோம்.

Log Information: சேவைகளுக்காக நீங்கள் தொடர்புகொள்ளும்போது, சர்வர் log விவரங்களை சேகரிக்கிறோம். அவற்றில் டிவைஸின் IP முகவரி, அணுகல் தேதிகள், நேரங்கள், மொபைல் செயலியின் அம்சங்கள் அல்லது பார்த்த வலைத்தள பக்கங்கள், மொபைல் செயலியின் செயலிழப்புகள் மற்றும் பிற கணினிச் செயல்பாடு, உலாவியின் வகை மற்றும் எங்களது சேவைகளுக்காகத் தொடர்புகொள்வதற்கு முன்பாக நீங்கள் பயன்படுத்திக் கொண்டிருந்த மூன்றாம் தரப்பு வலைத்தளம் அல்லது சேவை போன்ற விவரங்கள் அதில் அடங்கும்.

குக்கிகள் மற்றும் ட்ராக்கிங் தொழில்நுட்பங்கள் மூலம் சேகரித்த தகவல்கள்: தகவல்களைச் சேகரிக்க பல்வேறு தொழில்நுட்பங்களை நாங்கள் பயன்படுத்துகிறோம், உங்கள் கணினிக்குக் குக்கிகளை அனுப்புவதும் அதில் அடங்கும், குக்கிகள் என்பவை சிறிய டேட்டா கோப்புகள் ஆகும்; உங்களுடைய ஹார்டு டிரைவிலோ அல்லது உங்களது டிவைசிலோ அவை சேமிக்கப்படும். எங்களது சேவைகளையும் உங்களது அனுபவத்தையும் மேம்படுத்த அவை உதவும். எங்கள் சேவையின் பிரசித்தமான பகுதிகள், பிரசித்தமான அம்சங்கள் எவை, வருகைகளின் எண்ணிக்கை ஆகியவற்றைத் தெரிந்துகொள்ள அவை உதவும். குக்கிகளை defaultஆக அனுமதிக்கும் வகையில்தான் பெரும்பாலான வலைத்தள உலாவிகள் உருவாக்கப்பட்டுள்ளன. குக்கிகளை நீக்குவதை அல்லது மறுப்பதை நீங்கள் தெரிந்தெடுத்தால், எங்கள் சேவை கிடைக்கும் தன்மையை, செயல்படும் தன்மையை அவை பாதிக்கும் என்பதை தயவுசெய்து கவனத்தில் கொள்ளுங்கள். மேலும், வலைத்தள beaconகளை (இவை tracking Pixels என்றும் அறியப்படுகின்றன) பயன்படுத்தியும் தகவல்களைச் சேகரிக்கிறோம். வலைத்தள beaconகள் என்பவை மின்னணு இமேஜ்கள் ஆகும், எங்கள் சேவைகளில் அல்லது மின்னஞ்சல்களில் பயன்படுத்தப்படக் கூடியவை. வருகைகளை ட்ராக் செய்யவும் அல்லது பயன்பாடு மற்றும் பிரச்சாரச் செயல்திறனைப் புரிந்து கொள்ளவும் அவை பயன்படும்.

தகவல் பயன்பாடு:

உங்களைப் பற்றிச் சேகரித்த தகவல்களை நாங்கள் இவற்றிற்காகப் பயன்படுத்துவோம்: எங்களது சேவைகளை, எடுத்துக்காட்டாக, கட்டணம் செலுத்துவதை எளிதாக்க, ரசீதுகள் அளிக்க, நீங்கள் வேண்டும் பொருட்களையும் சேவைகளையும் அளிக்க (தொடர்பான தகவல்கள் அனுப்ப) புதிய அம்சங்களை உருவாக்க, பாதுகாப்பு அம்சங்களை உருவாக்க, பயனர்களை அங்கீகரிக்க, பொருட்கள் குறித்த புதுப்பிக்கப் பட்ட தகவல்கள், பாதுகாப்பு எச்சரிக்கைகள் மற்றும் நிர்வாகச் செய்திகள் உள்ளிட்ட சேவைகளை பராமரிக்கவும், மேம்படுத்தவும் பயன்படுத்துகிறோம்.

மோசடி மற்றும் எங்கள் சேவைகளைத் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுத்தல் உள்ளிட்ட நிறுவனத்திற்குள்ளான செயல்பாடுகளுக்கும்; மென்பொருள் பிழைகளையும் செயல்பாட்டு இயக்கம் சார்ந்த சிக்கல்களையும் சரிசெய்யவும்; டேட்டா அனலிஸிஸ் செய்தல், பரிசோதித்தல் மற்றும் ஆய்விற்கும், பயன்பாடு மற்றும் நடவடிக்கைப் போக்குகளைக் கண்காணிக்கவும் பகுப்பாய்வு செய்யவும் பயன்படுத்துகிறோம்;

செய்திகளை அனுப்பவும், அதனை எளிதாக்கவும்: 1) மதிப்பிடப்பட்ட வருகை நேரம், எரிபொருள் நிரப்புதலின் நிலை, இருப்பிடம் மற்றும் உங்கள் வாகனத்தின் ‘மேக்’ என்ன என்பதை அறிய உங்களுக்கும் ஓர் ஓட்டுநருக்கும் இடையில், அல்லது 2) பரிந்துரைகள், அழைப்புகள் அல்லது சேவைப்பகிர்வு போன்ற சில அம்சங்களை நீங்கள் பயன்படுத்துவது தொடர்பாக உங்களுக்கும் உங்களுடைய வழிகாட்டுதலின்படி உங்களது காண்டாக்ட் நபர் ஒருவருக்கும் இடையில் செய்திகளை அனுப்பவும், அதனை எளிதாக்கவும்.

பொருட்கள் குறித்த தகவல்கள், சேவைகள், ப்ரமோஷன்ஸ், செய்திகள், சிஞ்ச் ஃப்யூல் மற்றும் பிற நிறுவனங்களின் நிகழ்வுகள் உள்ளிட்ட உங்களுக்கு ஆர்வம் இருப்பதாக நாங்கள் கருதும் தகவல்கள் குறித்த செய்திகளை உங்களுக்கு அனுப்பவும்; போட்டி, sweepstake, அல்லது இதர ப்ரோமோஷன் நுழைவுகளைப் பரிசீலனை செய்வது மற்றும் தொடர்பான ஏதேனும் விருதுகள் முடிவுசெய்வதற்கும் பயன்படுத்துகிறோம்; சேவைகளில் சில அம்சங்கள், உள்ளடக்கம், சமூகத் தொடர்புகள், பரிந்துரைகள், மற்றும் விளம்பரங்கள் போன்றவற்றை அளித்தல் அல்லது பரிந்துரை செய்தல் உள்ளிட்ட சேவைகளை personalize செய்தல் மற்றும் மேம்படுத்துதலுக்காகப் பயன்படுத்துகிறோம்;

உங்கள் கருத்துகளுக்கும், கேள்விகளுக்கும் வேண்டுகோள்களுக்கும் எதிர்வினையாற்றுவதற்கும் மற்றும் பயனர்களுக்கு வாடிக்கையாளர் சேவை அளிப்பதற்கும், ஓட்டுநர்களுக்கு உதவுவதற்கும்; சேவை விதிமுறைகள் [www.CinchFuel.in/termsofservice] உள்ளிட்ட பொருந்தக்கூடிய பயனர் ஒப்பந்தங்களையும் அல்லது கொள்கைகளையும் அமுல்செய்வதற்கும்; எங்களையும், எங்கள் பயனர்களையும் அல்லது பொதுமக்களையும் எவ்விதமான தீங்குகளிலிருந்தும் அல்லது சட்டவிரோத நடவடிக்கைகளிலிருந்து பாதுகாக்கவும் பயன்படுத்துகிறோம்.

மூன்றாம் தரப்பு இணைப்புகளும் தகவல்களும்

சிஞ்ச் ஃப்யூலுக்கு சொந்தமற்ற, அதன் கட்டுப்பாட்டில் இல்லாத, மூன்றாம் தரப்பினரின் மெட்டீரியல்கள் சேவையில் உள்ளடங்கியிருக்கும். வெறுமனே வசதிக்காக மட்டும் அளிக்கப்பட்டிருப்பவை. அத்தகைய மூன்றாம் தரப்பின் வலைத்தளங்கள், தகவல்கள், மெட்டீரியல்கள், பொருட்கள் அல்லது சேவைகளுக்கு சிஞ்ச் ஃப்யூல் ஒப்புதல் அளிக்காது; எந்தப் பொறுப்பையும் ஏற்காது. அப்படி ஒரு மூன்றாம் தரப்பின் வலைத்தளம் அல்லது சேவையை, இந்தச் சேவையிலிருந்தோ அல்லது ஷேர் கன்டென்ட் மூலமாகவோ அல்லது ஏதேனுமொரு மூன்றாம் தரப்பு வலைத்தளம் அல்லது சேவை மூலமோ நீங்கள் அணுகினால், அதை நீங்கள் உங்களது சொந்த ரிஸ்கில் செய்கிறீர்கள்; அதுமட்டுமின்றி, அத்தகையத் தளங்களை நீங்கள் பயன்படுத்துவதற்கு இந்தத் தனியுரிமைக் கொள்கை பொருந்தாது என்பதையும் நீங்கள் புரிந்துள்ளீர்கள். ஏதேனும் ஒரு மூன்றாம் தரப்பு வலைத்தளத்தை, சேவையை அல்லது உள்ளடக்கத்தை, மற்றப் பயனர்கள் அளித்துள்ள உள்ளடக்கத்தை வரம்புகள் ஏதுமின்றி நீங்கள் பயன்படுத்துவதால் எழும் கடப்பாடுகளிலிருந்து வெளிப்படையாக சிஞ்ச் ஃப்யூலை நீங்கள் விடுவிக்கிறீர்கள். கூடுதலாக, அந்தச் சேவையில் காணப்படும் விளம்பரதாரர்களின் புரமோஷன்களுடன் உங்கள் பரிவர்த்தனையோ அல்லது பங்கேற்போ, பணம் செலுத்துதல் மற்றும் சரக்குகள் டெலிவரி உள்ளிட்ட, மற்றும் இது குறித்த பிற விதிமுறைகளும் (உத்தரவாதங்கள் போன்றவை) இவையனைத்துமே முற்றிலும் உங்களுக்கும் அந்த விளம்பரதாரர்களுக்கும் இடையிலான விஷயங்களாகும். அத்தகைய விளம்பரதாரர்களுடன் உங்களது பரிவர்த்தனை காரணமாக ஏற்படும் எவ்விதமான இழப்பு அல்லது சேதாரங்களுக்கும் சிஞ்ச் ஃப்யூல் பொறுப்பேற்காது என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்கள்.

தவல்களை வேறு வழிகளிலும் நாங்கள் பெறுகிறோம். எங்களது சேவைகள் மூலம் சேகரிக்கும் தகவல்களுடன் அவற்றை இணைத்துக்கொள்கிறோம். எடுத்துக்காட்டாக, உங்களது சிஞ்ச் ஃப்யூல் கணக்குடன், ஒரு payment providerஐ (எ.கா.Paytm) அல்லது சமூக ஊடகச் சேவையை (எ.கா. முகநூல்) இணைப்பதை, உருவாக்குவதை நீங்கள் தேர்ந்தெடுத்தாலோ, அவர்களுடன் அந்தக் கணக்கில் log in செய்யும்போதோ அல்லது தனிப்பட்ட வேறொரு செயலியுடன் உங்களை ஈடுபடுத்திக்கொண்டாலோ அல்லது எங்களது APIஐ (அல்லது நாங்கள் யாருடையதை பயன்படுத்துகிறோமோ அந்த APIஐ) பயன்படுத்தும் வலைத்தளத்துடன் நீங்கள் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளும்போதோ, உங்களைப் பற்றிய தகவல்களை அல்லது அந்த வலைத்தளம் அல்லது செயலியிலிருந்து உங்களது connectionsகளின் தகவல்களை நாங்கள் பெறுகிறோம்.

உங்களைப் பணியமர்த்தியிருப்பவர் எங்களது நிறுவனத் தீர்வுகளில் ஒன்றை பயன்படுத்தும்போதும் உங்களைப்பற்றிய தகவல்களை அவரிடமிருந்து நாங்கள் பெறுகிறோம்.

தகவல்கள் பகிர்வு

எங்களது சேவைகள் மூலம் உங்களைப்பற்றி நாங்கள் சேகரிக்கும் தகவல்களை, இந்த தனியுரிமைக் கொள்கையில் விவரித்துள்ளபடி அல்லது தகவல்களை விவரித்துள்ளதுபோல் சேகரிக்கும்போதோ அல்லது பகிரும்போதோ நாங்கள் பகிர்ந்து கொள்ளக்கூடும்; பின்வருவன அதில் அடங்கும்:

நீங்கள் கோரும் சேவைகளை அவர்கள் அளிப்பதற்கு வசதியாக உங்களது வாகனத்தின் மேக், மாடல், ஆண்டு, நிறம், லைசன்ஸ் பிளேட், புகைப்படம் (நீங்கள் அளித்திருந்தால்) மற்றும் இருப்பிடத்தை ஓட்டுநர்களுடன். பகிர்ந்து கொள்கிறோம்;

நீங்கள் கோரிய சேவையை, ஒரு பார்ட்னர்ஷிப் மூலமோ அல்லது ஒரு மூன்றாம் தரப்போ அல்லது நாங்களோ அளித்த ஒரு ப்ரமோஷனல் ஆஃபர் மூலம் அளிக்கும்போது ஒரு மூன்றாம் தரப்புடன் பகிர்ந்து கொள்கிறோம்;

ஒரு பொதுவெளி ஊடகத்தில் நீங்கள் உங்களது கருத்துகளை, வலைப்பதிவாகவோ, சமூக ஊடகப் பதிவுகளாகவோ தெரிவிக்கும்போதும் அல்லது எங்களது சேவைகளின் வேறு அம்சங்களிலோ, பொதுமக்கள் பார்க்கும் வகையில் பதிவிடும்போதும், பொதுமக்களுடன் பகிர்ந்துகொள்கிறோம்;

நாங்கள் தகவல்களைப் பகிர்ந்துகொள்ள நீங்கள் அனுமதிக்கும் மூன்றாம் தரப்புடன், எடுத்துக்காட்டாக எங்களது API அல்லது சேவைகளுடன் ஒருங்கிணைந்திருக்கும் இதரச் செயலிகள் அல்லது வலைத்தளங்கள் அல்லது நாங்கள் ஒருங்கிணைந்து செயல்படும் ஒரு API அல்லது சேவைகளுடன் பகிர்ந்துகொள்கிறோம்; மற்றும், எங்களது நிறுவன தீர்வுகளில் நீங்கள் பங்கேற்கும் சமயத்தில், உங்களைப் பணியமர்த்தியிருப்பவருடன் (அல்லது ஒத்த நிறுவனம்) மற்றும் எங்களால் அல்லது உங்களது முதலாளியால் அமர்த்தப்பட்டிருக்கும் அவசியமான மூன்றாவது தரப்பினருடன் (எ.கா. செலவு நிர்வாக சேவை அளிப்பவர்) பகிர்ந்து கொள்கிறோம்; மற்றும், வருமான வரிச் சட்டம் 2000 பிரிவு 43-A (நியாயமான பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் செயல்முறைகள் மற்றும் தனிநபர் தரவு அல்லது தகவல்கள்) விதியின்படி உங்களது தகவல்களை நாங்கள் பகிர்ந்துகொள்ளக் கூடும்.

சேவைகள் அளிக்கும் அல்லது எங்கள் சார்பாகத் தரவுகளை செயல்முறைக்கு உட்படுத்தும் எங்களது துணை நிறுவனங்களுடன் மற்றும் இணைப்பு நிறுவனங்களுடன் அல்லது தரவுகளை மையப்படுத்துவதற்கோ மற்றும்/ அல்லது logistics நோக்கங்களுக்காகப் பயன்படுத்துகிறோம்;

எங்கள் சார்பாக பணிகளைச் செய்துமுடிக்க, தேவையான இதுபோன்ற தகவல்களை அணுகவேண்டிய தேவையிருக்கும் விற்பனையாளர்கள், ஆலோசகர்கள், சந்தைப்படுத்தலில் ஈடுபட்டிருக்கும் எமது partners மற்றும் பிற சேவை வழங்குவோர்களுடன் பகிர்ந்துகொள்கிறோம்;

ஒரு தகுதி வாய்ந்த அதிகாரி தகவல் கேட்கும்போது அதற்குப் பதில் தரும் விதமாக, அவ்வாறு தகவல்களை disclose செய்வது பொருத்தமான சட்டத்தின் படியோ, கட்டுப்பாட்டின்படியோ அல்லது சட்டப்பூர்வான செயல்முறையின் படியோ சட்டப்படியானது அல்லது தேவைப்படுகிறது என்கிறபோது பகிர்கிறோம்;

எங்களது பயன்பாட்டு விதிமுறைகளுடன் அல்லது பிற கொள்கைகளுடன் உங்கள் செயல்பாடுகள் இசைவுடன் இல்லை என்றாலோ அல்லது சிஞ்ச் ஃப்யூலினுடைய அல்லது பிறரின் உரிமைகளை, சொத்தை அல்லது பத்திரத்தைப் பாதுகாக்கவோ, சட்டத்தை அமுல்படுத்தும் அதிகாரிகள், அரசாங்க அதிகாரிகள், அல்லது பிற மூன்றாம் தரப்பினரிடம் பகிர்கிறோம்;

ஏதேனும் merger நடக்கும்போதோ, அதற்கான பேச்சுவார்த்தைகள் நடக்கும்போதோ அல்லது நிறுவனத்தின் சொத்துகளை விற்கும்போதோ, வேறொரு நிறுவனத்தால் எங்கள் வியாபாரம் முழுவதுமோ அல்லது அதன் ஒருபகுதியோ consolidate செய்யப்பட்டாலோ அல்லது மறுசீரமைப்பு செய்யும்போது நிதியுதவி செய்யும்போதோ அல்லது கையகப்படுத்தும்போதோ பகிர்கிறோம்;

அல்லது, நாங்கள் உங்களுக்குத் தெரிவிக்கும்போது, அந்தப் பகிர்வுக்கு நீங்கள் ஒப்புதல் அளிக்கிறீர்கள்; ஒன்றிணைக்கப்பட்ட மற்றும்/அல்லது மேலும் அநாமேதய வடிவத்தில், உங்களை அடையாளம் காண்பதற்குப் பொருத்தமான முறையில் அதனை பயன்படுத்தமுடியாத வகையில் நாங்கள் பகிர்கிறோம்.

சமூகப் பகிர்விற்கான அம்சங்கள்

சமூகப் பகிர்விற்கான அம்சங்களுடன் மற்றும் தொடர்பான சாதனங்களுடன் சேவைகள் ஒருங்கிணைந்து செயல்படக்கூடும். பிற செயலிகள், வலைத்தளங்கள் அல்லது ஊடகம் மற்றும் இவை போன்றவற்றை எங்கள் சேவைகளில் நீங்கள் பயன்படுத்தும்போது உங்கள் செயல்களைப் பகிர்ந்துகொள்ள அனுமதிக்கின்றன. சமூகப் பகிர்வு சேவைக்காக நீங்கள் நிறுவியிருக்கும் அமைப்புமுறைகளைப் பொறுத்து அத்தகைய அம்சங்களை நீங்கள் பயன்படுத்துவது, உங்களது நண்பர்களுடன் அல்லது பொதுமக்களுடன் தகவல்களைப் பகிர்ந்துகொள்வதை அனுமதிக்கிறது. நீங்கள் அளிக்கும் அல்லது அவர்கள் மூலமாக நீங்கள் பகிர்ந்து கொள்ளும் தரவினை அவர்கள் எவ்வாறு கையாளுகிறார்கள் என்பதை அறிய, அந்த சமூக பகிர்வு சேவைகளின் தனியுரிமைக் கொள்கைகளைப் பார்க்கவும்.

பகுப்பாய்வு மற்றும் பிறர் அளிக்கும் விளம்பர சேவைகள்

பார்வையாளர் அளவீடு மற்றும் பகுப்பாய்வு சேவைகளை எங்களுக்கு அளிக்க மற்றவர்களை நாங்கள் அனுமதிக்கிறோம். வலைத்தளத்தில் எங்கள் சார்பாக விளம்பரச் சேவை அளித்து, அந்த விளம்பரங்களை track செய்து அவற்றின் செயல்பாட்டை எங்களுக்கு அவர்கள் தெரிவிப்பார்கள். எங்கள் வலைத்தளத்திற்கு வருகைதந்து எங்கள் சேவைகளை நீங்கள் பயன்படுத்தும்போது உங்களது டிவைஸைக் கண்டறியவும், அதுபோன்றே பிற ஆன்லைன் வலைத்தளங்களை மற்றும் சேவைகளை நீங்கள் பயன்படுத்தும்போது உங்கள் IP முகவரி, வலைத்தள உலவி, பார்த்த பக்கங்கள், பக்கங்களின் செலவிட்ட நேரம், கிளிக் செய்த இணைப்புகள் மற்றும் conversion தகவல் ஆகியனவற்றை அறியவும் இந்த நிறுவனங்கள் குக்கிகள், வலைத்தள beaconகள், SDKகள் மற்றும் பிற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகின்றன. சில வலைத்தள உள்ளடக்கங்களின் மற்றும் பிற வலைத்தளங்களின் பிரபல்யத்தைத் தீர்மானிக்கவும் உங்களது ஆன்லைன் நடவடிக்கையை நன்கு புரிந்துகொள்ளவும் டேட்டா பகுப்பாய்வு செய்யவும் மற்றும் டேட்டாவை track செய்யவும், எங்களாலும், மற்றும், மூன்றாம் தரப்பினராலும் ஏனையவற்றுடன் இந்தத்தகவல்களும் பயன்படுத்தப்படக்கூடும். மூன்றாம் தரப்பினரின் குக்கிகள், வலைத்தள beaconகள், அல்லது பிற tracking தொழில்நுட்பங்களுக்கு எங்களது தனியுரிமைக் கொள்கை பொருந்தாது; மற்றும் நாங்கள் பொறுப்பேற்கவும் இயலாது. அவர்களது தனியுரிமை நடைமுறைகளை மேலும் தெரிந்துகொள்ள இந்த மூன்றாம் தரப்பினரின் தனியுரிமைக் கொள்கைகளை சரிபார்த்துக்கொள்ள நீங்கள் வழிகாட்டப்படுகிறீர்கள்.

கணக்கு தகவல்கள்

உங்களது கணக்கு விவரங்களை எந்த நேரத்திலும், உங்கள் கணக்கில் log in செய்து நீங்கள் திருத்த முடியும். உங்கள் கணக்கை ரத்து செய்ய விரும்பினால், தயவு செய்து support@CinchFuel.in . என்ற முகவரியில் எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பலாம். சில நேர்வுகளில், சட்டத்தின்படியோ அல்லது சட்டப்பூர்வமான வணிக நோக்கங்களுக்காக, சட்டம் அனுமதிக்கும் அளவிற்கு, தகவல்கள் சிலவற்றை நாங்கள் எங்களிடமே வைத்திருப்போம் என்பதைத் தயவுசெய்து நீங்கள் கவனத்தில் கொள்ளுங்கள். எடுத்துக்காட்டாக, உங்கள் கணக்கில் credit அல்லது debit இருந்தால், அல்லது நீங்கள் மோசடி செய்துள்ளீர்கள் அல்லது எங்கள் சேவைகளின் விதிமுறைகளை மீறிவிட்டீர்கள் என்று நாங்கள் நம்பினால், உங்கள் தகவல்களை முழுமையாக நீக்குவதற்கு முன்னால் இந்தப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு நாங்கள் முயல்வோம்.

அணுகல் உரிமைகள்

ஒரு பொருந்தக்கூடிய சட்டத்தின்படி, சேமித்து வைத்திருக்கும் தனிநபர் டேட்டாவை அணுகுவதற்கும், திருத்தம் செய்வதற்கும், மற்றும்/அல்லது நீக்குவதற்கும் தனிநபர்கள் வைக்கும் வேண்டுகோள்களுக்கு சிஞ்ச் ஃப்யூல் இணங்குகிறது.

இருப்பிடத் தகவல்

உங்களது டிவைஸிலிருந்து, உங்கள் மொபைல் ஆபரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்தும் அனுமதி முறையின் மூலமாக இருப்பிடத்தைத் துல்லியமாக எங்களது செயலி சேகரிக்க உங்கள் அனுமதியை நாங்கள் கோருகிறோம். தொடக்கத்தில் இந்தத் தகவல்களைச் சேகரிக்க நீங்கள் அனுமதித்த பின்னர், உங்கள் மொபைலில் இருப்பிட அமைப்பு முறைகளை மாற்றி disable செய்துவிடலாம். இருப்பினும், எங்களது சேவைகள் சிலவற்றை நீங்கள் பயன்படுத்தும் திறனை இது கட்டுப்படுத்தும். கூடுதலாக, உங்களது டிவைஸிலிருந்து துல்லியமான இருப்பிடத் தகவல்களை எங்கள் செயலி சேகரிக்கவியலாமல் disable செய்வது, ஓர் ஓட்டுநரின் டிவைஸிலிருந்து சேவைக்கான இருப்பிடத் தகவல்களைச் சேகரிக்கும் எங்களது திறனையோ அல்லது உங்களது IP முகவரியிலிருந்து தோராயமான இருப்பிடத்தகவல்களை சேகரிக்கும் எங்கள் திறனையோ கட்டுப்படுத்தாது.

புரமோஷனல் செய்தித்தொடர்புகள்

எங்களிடமிருந்து புரமோஷனல் செய்திகளைப் பெறுவதிலிருந்து, அந்தச் செய்திகளில் இருக்கும் வழிமுறைகளைப் பின்பற்றி நீங்கள் விலகிக்கொள்ளலாம். அப்படி நீங்கள் விலகிக்கொண்டாலும், புரமோஷனல் தொடர்பற்ற செய்தித் தொடர்புகளை நாங்கள் தொடர்ந்து அனுப்புவோம். அவை உங்களது கணக்கு, நீங்கள் கோரிய சேவைகள் அல்லது நடந்து கொண்டிருக்கும் எங்கள் வணிக உறவுகள் தொடர்பானவையாக இருக்கும்.

Geo-Location விதிமுறைகள்

மூன்றாம் தரப்பினர் அளிக்கும் சில செயல்பாடுகளை மற்றும் சேவைகளை, சேவைகள் உட்கொண்டிருக்கின்றன. அவற்றை பயன்படுத்துகின்றன. வரைபடங்கள், ஜியோகோடிங், இடங்கள் மற்றும் கூகுள் அல்லது கூகுள் போன்ற மூன்றாம் தரப்பினர் அளிக்கும் உள்ளடக்கங்கள் போன்றவற்றை சேவைகளின் ஒருபகுதியாக (”Geo-Location சேவைகள்”) சேர்த்துக்கொள்ள எங்களை அனுமதிக்கின்றன. நீங்கள் Geo-Location சேவைகளைப் பயன்படுத்துவது, அந்த நேரத்தில் நடைமுறையிலிருக்கும் கூகுள் வரைபடங்கள்/கூகுள் எர்த் ( ) போன்றவற்றைப் பயன்படுத்தக் கூறப்பட்டுள்ள விதிமுறைகளைப் பொருத்தது. Geo-Location சேவைகளைப் பயன்படுத்துவதின் மூலம், கூகுளின் பயன்பாட்டு விதிமுறைகளுக்கு அல்லது பிற சேவை அளிப்போரின் தொடர்புடைய விதிமுறைகளுக்கு நீங்கள் கட்டுப்பட்டவர்கள் என்பதை ஒப்புக்கொள்கிறீர்கள்.

சர்வதேச அளவில் வருகை தருவோரும் பயனர்களும்

தற்போது நாங்கள் இந்தியாவில் மட்டுமே சேவை அளித்து வருகிறோம். உலகத்தின் வேறு ஒரு பிரதேசத்தைச் சேர்ந்த பயனராக நீங்கள் இருக்க விரும்பும்பட்சத்தில், உங்களுடைய தனிநபர் தகவல்களை அந்த பிரதேசங்களுக்கு வெளியில் சேமிக்கவும் செயல்முறைக்கு உட்படுத்தவும் வேறு இடத்திற்கு transfer செய்கிறீர்கள் என்பதை தயவுசெய்து அறிந்து கொள்ளுங்கள். மேலும் நாங்கள் உங்கள் தரவுகளை இந்தியாவிலிருந்தும் அல்லது வேறு இடத்திலிருந்தும் மற்ற நாடுகளுக்கும் அல்லது பிரதேசங்களுக்கும், அவற்றைச் சேமிக்கவும், தரவு செயல்முறைக்கு உட்படுத்தவும், உங்கள் வேண்டுகோள்களை நிறைவேற்றவும், மற்றும் சேவைகள் தொடர்பான ஏனைய சேவைகளை அளிக்கவும் transfer செய்ய வேண்டியிருக்கும். சேவைகளில் அல்லது சேவைகள் மூலமாக, தனிநபர் தகவல்கள் உள்ளிட்ட ஏதேனும் தகவல்களை அளிப்பதன் மூலமாக, அவ்வாறு வேறு இடத்திற்கு transfer செய்வதற்கும், சேமிக்கவும், செயல்முறைக்கு உட்படுத்தவும் நீங்கள் ஒப்புதல் அளிக்கிறீர்கள்.

தனியுரிமைக் கொள்கையில் மாற்றங்கள்

முன்னோக்கிச் செல்லும் கொள்கையின் அடிப்படையில் எந்த நேரத்திலும் இந்தத் தனியுரிமை கொள்கையை மாற்றும் உரிமையை எங்களது விருப்புரிமையாக நாங்கள் வைத்துள்ளோம். மாற்றங்கள் இருக்கின்றனவா என்று அவ்வப்போது இந்த தனியுரிமைக் கொள்கையைச் சரிபார்த்துக் கொள்ளுங்கள். வலைத்தளத்தில் அது வெளியிடப்பட்டவுடன் மாற்றம் செய்யப்பட்ட தனியுரிமைக்கொள்கை நடைமுறைக்கு வந்துவிடும். இந்த தனியுரிமைக் கொள்கையில் மெட்டிரியல் மாற்றங்கள் ஏதேனும் நாங்கள் செய்தால், அந்த மாற்றங்கள் நடைமுறைக்கு வருவதற்கு முன்னால், நியாயமான அறிவிப்பு ஒன்றை உங்களுக்கு அளிக்க நாங்கள் முயற்சிப்போம்.

தொடர்ந்து எங்களது சேவைகளைப் பயன்படுத்துவதால், புதுப்பிக்கப்பட்ட, மாற்றம் செய்யப்பட்ட திருத்தப்பட்ட தனியுரிமைக் கொள்கைக்கு நீங்கள் கட்டுப்பட்டவர் ஆகிறீர்கள். அவ்வாறு கட்டுப்படுவதற்கு நீங்கள் விரும்பவில்லை என்றால், சேவைகளைப் பயன்படுத்துவதை நீங்கள் உடனடியாக நிறுத்தவேண்டும். இந்த தனியுரிமைக் கொள்கையால் எழும் தகராறுகள், அந்த தகராறு எழும் சமயத்தில் செயல்பாட்டிலிருக்கும் தனியுரிமைக் கொள்கை version அடிப்படையில் தீர்க்கப்படும்.

எங்களது தகவல் நடைமுறைகளையும், எந்த வழிகளில் உங்களது தனியுரிமையை நீங்கள் பாதுகாத்துக் கொள்ள உதவியாக இருக்கும் என்பதையும் தெரிந்துகொள்ள, எங்கள் சேவைகளை அணுகும்போதெல்லாம், இந்தத் தனியுரிமைக் கொள்கையைப் படித்து ஆய்வு செய்து கொள்ளும்படி நாங்கள் உங்களை ஊக்குவிக்கிறோம்.

Get Order Now