சிஞ்ச் ஃப்யூல்

விதிமுறைகளும் நிபந்தனைகளும்

சேவையை நீங்கள் அணுகுவதும் பயன்படுத்துவதும் நிபந்தனைக்குட்பட்டது

  • ஹோம்
  • /
  • விதிமுறைகளும் நிபந்தனைகளும்

பயன்பாட்டு விதிமுறைகள்:

இந்தப் ’பயன்பாட்டு விதிமுறைகள்’, தகவல் தொழில்நுட்ப (இடைத்தரகர்களுக்கான வழிகாட்டுதல்கள்) விதிகள், 2011, விதி 3(1) படி வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன; அதன் அடிப்படையில்தான், வலைத்தளத்தை அணுகவும் அல்லது பயன்படுத்தவுமான விதிகளும் கட்டுப்பாடுகளும், தனியுரிமைக்கொள்கையும், பயன்பாட்டு விதிமுறைகளும் வெளியிடப்படவேண்டும். பயன்பாட்டு விதிமுறைகளுக்கான ஒப்பந்தம் (”ஒப்பந்தம்”) நீங்கள் www.CinchFuel.com வலைத்தளத்தைப் பயன்படுத்துவதை நிர்வகிக்கிறது. அந்த வலைத்தளம் சிஞ்ச் ரீடைல் பிரைவேட் லிமிடெட்க்குச் சொந்தமானது; அதனால் இயக்கப்படுகிறது. சிஞ்ச் ஃப்யூல், (இந்திய) கம்பெனிகள் சட்டம் 2013 விதிமுறைகளின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள பிரைவேட் லிமிட்டட் கம்பெனி ஆகும். பதிவு செய்யப்பட்ட அதன் அலுவலகம், புது எண் 9, பழைய எண் 11, முதல் தளம், பாளையக்காரன் தெரு, கலைமகள் நகர், ஈக்காட்டுத் தாங்கல், சென்னை – 600032ல் இயங்குகிறது.

சேவைகளை அணுகுவதற்கும் அல்லது பயன்படுத்தும் முன்பாகவும் இந்த விதிமுறைகளைக் கவனமாகப் படிக்கவும்; ஏனெனில், சிஞ்ச் ஃப்யூல் அளிக்கும் சேவைகளை நீங்கள் அணுகுவது மற்றும் அல்லது பயன்படுத்துவதை இந்த பயன்பாட்டு விதிமுறைகள்தான் நிர்வகிக்கின்றன. இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்தும் எந்த நபரும் ”பயனர்” அல்லது எளிமையாக “நீங்கள்” என்று குறிப்பிடப்படுகிறார். இந்த வலைத்தளம் அளிக்கும் சேவைகளை (”சேவைகள்”) பயனர் அணுகுவதும் மற்றும் பயன்படுத்துவதும், இந்த விதிமுறைகளால் கட்டுப்படுத்தப்பட்டுள்ள பயனர் ஒப்பந்தத்தின் பகுதியாக அமைகிறது, மற்றும் கருதப்படுகிறது. இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம் இந்த விதிமுறைகளுக்குப் பயனர் ஒப்புக்கொள்கிறார்; பயனரின் முகவராக, பயனரின் சார்பாக செயல்படவும் HSD மற்றும் மோட்டார் ஸ்பிரிட் (”எரிபொருள்”) கொள்முதல் செய்யவும், பயனர் தெரிந்தெடுக்கும் இடத்திற்கு அதனை ட்ரான்ஸ்போர்ட் செய்யவும், அதன்பின்னர் எரிபொருளை பயனர் வழிகாட்டுதலின்படி ஒரு கண்டைனரில் மாற்றித்தரவும் அல்லது வேறொரு இடத்திற்கு எடுத்துச் செல்லவும் சிஞ்ச் ஃப்யூலை நியமிக்கிறார்.

இந்த விதிமுறைகளின் நோக்கங்களுக்கோ அல்லது வேறுவகையிலோ, சிஞ்ச் ஃப்யூல் என்பது ஒரு ஆயில் கம்பெனியோ/ ஆயில் சந்தைப்படுத்தும் நிறுவனமோ (அல்லது அதன் முகவரோ/இணைப்பு நிறுவனமோ/துணை நிறுவனமோ அல்லது ஏதோ ஒருவிதத்தில் எந்த ஆயில் கம்பெனிக்குமோ அல்லது இந்தியாவிலோ அல்லது உலகின் வேறு எந்தப் பகுதியிலோ இயங்கும் ஆயில் சந்தைப்படுத்தும் நிறுவனத்துடன் தொடர்புடையது அல்ல) அல்ல என்று சிஞ்ச் ஃப்யூல் இதன் மூலம் அறிவிக்கிறது; பயனர் அங்கீகரிக்கிறார்; ஒப்புக்கொள்கிறார். மேலும் சிஞ்ச் ஃப்யூல், வெளிப்படையான அல்லது மறைமுகமான முறையில், எந்த ஆயில் சந்தைப்படுத்தும் கம்பெனியையோ அல்லது இந்தியாவில் அல்லது உலகின் வேறு எந்தப் பகுதியிலோ இயங்கும் ஆயில் கம்பெனியையோ ஆமோதிக்கவில்லை.

சிஞ்ச் ஃப்யூல் அதன் பயனர்களுக்கு, (1) கொள்முதல் மூலம்; (2) ட்ரான்ஸ்போர்ட் செய்வதன் மூலம் மற்றும் (3) ’பகுதி II சேவைகளில்’ விவரித்துள்ளபடி பயனரால் குறிப்பிடப்பட்ட இடத்தில் எரிபொருளை டெலிவரி செய்வதன் மூலம் logistics சேவைகள் மட்டுமே அளிக்கிறது. அந்தச் சேவையை வழங்கும்போது, எரிபொருளை டெலிவரி செய்ய வேண்டிய இடத்தை எளிதாக அணுகுவது மற்றும் இறுதி டெலிவரி இடத்தின் அடிப்படையில் எரிபொருளைக் கண்டுபிடிக்கவும், பயனரின் சார்பாகக் கொள்முதல் செய்யப்பட்ட எரிபொருளை பயனர் தெரிந்தெடுக்கும் இடத்திற்கும் ட்ரான்ஸ்போர்ட் செய்வதற்கும், மற்றும் பயனரின் சார்பாக அந்தக் குறிப்பிட்ட எரிபொருளைப் பயனர் தெரிந்தெடுக்கும் கொள்கலனில்/கலன்களில் transfer செய்வதற்கும் பயனரின் முகவராக சிஞ்ச் ஃப்யூல் செயல்படுகிறது. அங்கீகரிக்கப்படாத பரிமாற்றத்திலோ அல்லது அங்கீகரிக்கப்படாத விற்பனையிலோ அல்லது அங்கீகரிக்கப்படாத கொள்முதலிலோ அல்லது ஏதேனும் முறைகேட்டிலோ சிஞ்ச் ஃப்யூல் ஈடுபடாது.

பயனரின் முன்முயற்சியாலும் வேண்டுகோளாலும், குறிப்பாக பயனர் மற்றும் சிஞ்ச் ஃப்யூல் என்ற இரண்டு தரப்பினருக்கு இடையில் இந்த ஒப்பந்தம்/உடன்படிக்கை ஏற்பட்டுள்ளது. அனைத்து பொறுப்புத்துறப்புகள், நிபந்தனைகள் மற்றும் சேவை விதிமுறைகள் உள்ளிட்ட இந்த ஆவணத்தில் கூறப்பட்டுள்ள அல்லது மறைமுகமாக குறிப்பிடப்பட்டுள்ள அனைத்தும் பேச்சுவார்த்தைக்கு உட்பட்டவையல்ல என்பதைப் பயனர் புரிந்துகொண்டுள்ளார், மற்றும், அங்கீகரிக்கிறார். மேலும், அதாவது, சிஞ்ச் ஃப்யூலின் சேவைகளை வாடகைக்கு எடுக்கும் நோக்கத்துடன் பயனர் சிஞ்ச் ஃப்யூலை அணுகினார் என்பதையும் அவ்வாறு செய்வதன்மூலம், சுதந்திரமாகவும், எவ்வித வற்புறுத்தலும் அல்லது நிர்ப்பந்தமும் இல்லாமல் அதனைச் செய்தார் என்பதையும், எந்தக் கட்டாயத்தையும் தவிர்க்கிறார் என்பதையும் பயனர் அங்கீகரிக்கிறார் மற்றும் ஒப்புக்கொள்கிறார்,

இந்த விதிமுறைகளைப் பயனர் ஒப்புக்கொள்ளவில்லை என்றால், பயனர் வலைத்தளத்தை மற்றும்/ அல்லது சேவைகளை அணுக முடியாது மற்றும்/ அல்லது பயன்படுத்தமுடியாது. இதற்கு முன்பிருந்த அல்லது மற்ற ஒப்பந்தங்களை அல்லது பயனருக்கும் சிஞ்ச் ஃப்யூலுக்கும் இடையில் தற்போதிருக்கும் மற்ற ஒப்பந்தங்களை இந்த விதிமுறைகள் வெளிப்படையாக இடப்பெயர்ப்புச் செய்கின்றன. எப்படியிருப்பினும், இந்த விதிமுறைகளை அல்லது சேவைகளை சிஞ்ச்ஃப்யூல் எந்த நேரத்திலும் ரத்து செய்யலாம் அல்லது பயனர் ஒருவருக்குச் சேவைகளை அல்லது சேவைகளின் பகுதியை அளிப்பதை நிறுத்தலாம் அல்லது அணுகலை மறுக்கலாம். சேவைகள் அளிக்கும் விஷயத்தில், துணை விதிமுறைகள் எந்நேரமும் பொருந்தும் என்பது இந்த விதிமுறைகளின் பகுதியாக அமைகிறது. பொருத்தமான சேவைகளை ஒட்டி ஏதேனும் மோதல் ஏற்பட்டால் இந்த விதிமுறைகளைவிட துணை விதிமுறைகள் மேலோங்கி நிற்கும்.

சிஞ்ச் ஃப்யூல் எந்த நேரத்திலும், இந்த விதிமுறைகளில் திருத்தம் செய்யலாம். வலைத்தளத்தில் இந்த திருத்தங்கள் வெளியானவுடன் அவை அமுலுக்கு வருகின்றன. விதிமுறைகளில் செய்யப்படும் திருத்தங்களையும் சேர்க்கைகளையும் தெரிந்துகொள்ள அவ்வப்போது இந்தத் தளத்திற்கு வருகைதந்து சரிபார்த்துக் கொள்ளவும். அவ்வப்போது திருத்தப்படும் அல்லது மாற்றம் செய்யப்படும் விதிமுறைகளை அறிந்து புதுப்பித்துக்கொள்வது பயனரின் பொறுப்பு. திருத்தம் செய்யப்பட்ட விதிமுறைகள் வெளியான பிறகு பயனர் சேவையைப் பயன்படுத்துவது என்பது, பயனர் திருத்தம் செய்யப்பட்ட விதிமுறைகளுக்கு ஒப்புதல் அளிக்கிறார், கட்டுப்படுகிறார் என்பதாகும். திருத்தம் செய்யப்பட்ட விதிமுறைகளுடன் பயனர் உடன்படவில்லை என்றால், தயவுசெய்து சேவைகளைப் பயன்படுத்த வேண்டாம்.

சேவைகள்:

பயனருக்கு உதவும் வகையில் தொழில்நுட்ப பணித்தளம் ஒன்றை உருவாக்க சேவைகள் அளிக்கப்படுகின்றன:

(1).பயனர்களின் சார்பாக எரிபொருளைக் கொள்முதல் செய்வதற்கு ஒரு முகவராக செயல்பட சிஞ்ச் ஃப்யூலை நியமிக்க, மேலும், (2). பயனர்கள் தெரிந்தெடுக்கும் இடத்திற்கு எரிபொருளை ட்ரான்ஸ்போர்ட் செய்வதைத் திட்டமிடவும் (சிஞ்ச் ஃப்யூல் உபகரணங்களை ஓர் ஆபரேட்டர் உதவியுடன் வாடகைக்கு அமர்த்தி/குத்தகைக்கு எடுத்து பயனர்களின் சார்பாக எரிபொருளை ட்ரான்ஸ்போர்ட் செய்வது உள்ளிட்ட), சிஞ்ச் ஃப்யூல் உபகரணங்களை ஓர் ஆபரேட்டர் உதவியுடன் வாடகைக்கு அமர்த்தி/குத்தகைக்கு எடுத்து பயனர்கள் தெரிந்தெடுக்கும் கண்டைனரில் transfer செய்வதற்கு.. (1ம் மற்றும் 2ம் ஒட்டுமொத்தமாக “சேவைகளின்” பகுதியாகின்றன). இறுதி டெலிவரி இடத்தை எளிதாக அணுகுதல் மற்றும் தூரத்தை அடிப்படையாகக் கொண்டு ஆயில் நிறுவனங்களின் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்க ஏஜென்சிகள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்களிடமிருந்து (பொதுத்துறை அல்லது தனியார்) எரிபொருளைக் கொள்முதல் செய்வதற்குப் பயனர்களின் முகவராக, சிஞ்ச் ஃப்யூல் செயல்படுகிறது.

தனிப்பட்ட எழுத்துப்பூர்வமான ஒப்பந்தத்தில் சிஞ்ச் ஃப்யூல் பயனாளரிடம் ஒப்புக்கொள்ளாத நிலையில், சேவைகள், பயனரின் தனிப்பட்ட, வணிகப் பயன்பாட்டிற்கு அல்லாத உபயோகத்திற்கு மட்டுமே அளிக்கப்படுகின்றன.

விதிமுறைகளில் விவரிக்கப்பட்டுள்ளபடி, எரிபொருளை ஆன்–டிமாண்ட் அடிப்படையில் டெலிவரி செய்யும் சேவைகளை சிஞ்ச் ஃப்யூல் செய்கிறது. பயனர், சிஞ்ச் ஃப்யூலின் வலைத் தளத்தை/ மொபைல் செயலியைப் பயன்படுத்தி எரிபொருளை ஆர்டர் செய்யலாம். பயனரின் சார்பாக, பயனரின் முகவராக சிஞ்ச் ஃப்யூல் எரிபொருளைக் கொள்முதல் செய்துவிட்ட அறிவிப்பைப் பெறுவதற்கு முன்பாக, எந்த நேரத்திலும் பயனர் தனது ஆர்டரை ரத்து செய்யலாம். பயனர் குறிப்பிட்டிருக்கும் இடத்திற்கு சிஞ்ச் ஃப்யூல் டெலிவரி வாகனம் சென்றுகொண்டிருக்கிறது என்பதையும் சிஞ்ச் ஃப்யூல் பயனருக்கு அறிவிக்கும். டெலிவரி வாகனம் அந்த இடத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்று சிஞ்ச் ஃபுயல் அறிவிக்கையிலோ அல்லது பயனர் அப்பாயிண்ட்மெண்ட் விண்டோ ஒன்றைக் குறிப்பிட்டாலோ, பயனர், அந்த விண்டோ, ஒரு எஸ்டிமேட் மட்டுமே என்பதை ஒப்புக்கொள்கிறார். அந்த விண்டோ காட்டுவதுபோல், குறிப்பிட்ட நேரத்திற்குள் டெலிவரியை சிஞ்ச் ஃப்யூல் உத்தரவாதம் அளிக்காது; மேலும், அந்த மதிப்பிடப்பட்ட நேரத்திற்குள் சிஞ்ச் ஃப்யூலின் டெலிவரி வாகனம் அந்த இடத்தை அடையும் என்றும் உத்தரவாதம் அளிக்காது.

மதிப்பிடப்பட்ட விண்டோ நேரத்திற்குள்ளோ அல்லது அப்புறமோ, குறிப்பிட்ட இடத்தை சிஞ்ச் ஃப்யூல் டெலிவரி வாகனம் அடைந்ததும், சிஞ்ச் ஃப்யூல் செயலியின் மூலம் ஓட்டுநர் பயனருக்குத் தகவல் தெரிவிப்பார். மேலும், பயனரின் சார்பாகக் கொள்முதல் செய்யப்பட்ட எரிபொருளை பயனர் தெரிந்தெடுக்கும் கண்டைனரில் transfer செய்வதற்கு சிஞ்ச் ஃப்யூல் ஓட்டுநர் ஐந்து நிமிடத்திற்குமேல் காத்திருக்கமாட்டார். அந்த ஐந்து நிமிடத்திற்குள்ளாக அணுகல் கிடைக்கப் பெறவில்லை என்றால், சிஞ்ச் ஃப்யூல் டெலிவரி வாகனம் அந்த இடத்தைவிட்டு அகன்றுவிடும்; டெலிவரி வெற்றிகரமாக முடிந்ததோ இல்லையோ, பொருத்தமான கட்டணம் பயனரின் மேல் விதிக்கப்படும். பொருந்தக்கூடிய சட்டங்கள் விதிக்கும் கட்டுப்பாடுகள், நிலப்பரப்பு அல்லது கட்டிடத்தின் அம்சங்கள் மற்றும் வரம்புகள் ( எ.கா. overhead clearance) அல்லது தனியார் உடைமைச் சொந்தக்காரர்கள் சிலரின் எதிர்பார்ப்புகள் போன்ற காரணங்களால், சேவை பகுதிக்குள்ளிருக்கும் அனைத்து இடங்களிலும் சேவைகள் அளிக்கமுடியாமல் போகலாம். எளிதான அணுகல் இல்லை மற்றும் வேறு காரணத்தின் அடிப்படையில், ஒரு பகுதிக்குள் டெலிவரி செய்வதற்கு நுழைய மறுக்கும் உரிமை எங்களுக்கு உண்டு. அத்தகைய சந்தர்ப்பத்தில் பயனரிடமிருந்து கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது.

உரிமம்:

இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்குப் பயனர் இணங்குகிறார் என்ற அடிப்படையில், அல்லது ஒருவேளை பயன்படுத்தும்போது அப்படி உடன்படுகிறார் என்ற நிலையில் - வரம்பிற்குட்பட்ட, கட்டுப்படுத்தப்பட்ட, துணை-உரிமம் வழங்கமுடியாத, பயனரால் மாற்றமுடியாத (ஓர் ஆர்டர் செயலில் இருக்கும்போது), ஆனால், சிஞ்ச் ஃப்யூலால் மாற்றமுடிந்த (எந்த நேரத்திலும்) வேறு ஒருவருக்கு மாற்றித்தர முடியாத உரிமத்தைக் கீழ்க்கண்ட பணிகளுக்காகப் பயனருக்கு அளிக்கிறது;

பயனரின் கருவியில் செயலிகளை அணுகுவது மற்றும் பயன்படுத்துவது என்பது, முற்றிலும் சேவைகளைப் பயன்படுத்துவதுடன் தொடர்புடையது. (பார்க்க: சேவைகளைப் பயன்படுத்துதல் பகுதி III).

சேவைகளைப் பயன்படுத்துவதன் மூலம் கிடைக்கக்கூடிய எந்தவொரு உள்ளடக்கம், தகவல்கள் மற்றும் தொடர்பான materialகள் ஒவ்வொன்றும், பயனரின் தனிப்பட்ட, வணிகப் பயன்பாட்டிற்கு அல்லாத உபயோகத்திற்கு மட்டுமே. (பார்க்க: சேவைகளைப் பயன்படுத்துதல் பகுதி III).

இங்கு வெளிப்படையாக அனுமதிக்கப்படாத உரிமைகள் அனைத்தும் சிஞ்ச் ஃப்யூலாலும், சிஞ்ச் ஃப்யூல் உரிமம் பெற்றவர்களுக்கும் உரியவை.

உரிமம் அளிக்கப்படுவதற்கான கட்டுப்பாடுகளும் தற்செயல் நிகழ்வுகளும்

பயனரின் தற்செயல் நிகழ்வுகளுக்குப் பின்வரும் நிபந்தனைகளின் அடிப்படையில் உரிமம் அளிக்கப்படுகிறது. பயனர் தன்னைக் கீழ்க்கண்டவாறு பிரதிநிதித்துவப்படுத்துகிறார்; உத்தரவாதம் அளிக்கிறார்; மேற்கொள்கிறார்:

பயனர், இந்தியாவில் பொருளைச் சந்தைப்படுத்துவதில் ஈடுபட்டிருக்கும் பொதுத்துறை/தனியார் நிறுவனத்தால் நியமிக்கப்பட்டிருக்கும் விற்பனையாளரோ/ முகவரோ/ விநியோகஸ்தரோ அல்ல; மற்றும், அரசாங்க ஏஜென்சியிலிருந்தோ அல்லது ஆயில் நிறுவனத்திலிருந்தோ எரிபொருளை கொள்முதல் செய்வதற்குத் தடை செய்யப்பட்டுள்ள தனி நபரோ அல்லது நிறுவனமோ அல்ல; மற்றும், செயலியின் எந்தப் பகுதியிலிருந்தும் பதிப்புரிமை, வணிக முத்திரை அல்லது இதர தனியுரிமை அறிவிப்புகளை மாற்றவோ, கூட்டவோ அல்லது நீக்கவோ செய்யாதவர்; மற்றும், சிஞ்ச் ஃப்யூலால் வெளிப்படையாகக் கூறப்படாத சேவைகளை, நகலெடுக்கவோ, பிரதியெடுக்கவோ, மாற்றம் செய்யவோ, அவற்றின் அடிப்படையில் படைப்புகளை உருவாக்கவோ, விநியோகிக்கவோ, உரிமம் வழங்கவோ, குத்தகை விடவோ, விற்பனை செய்யவோ, மறு விற்பனை செய்யவோ, மாற்றவோ, பொதுவெளியில் காட்சிப்படுத்தவோ, பொதுவெளியில் நிகழ்த்தவோ, transmit செய்யவோ, ஸ்ட்ரீமிங் செய்யவோ, ஒலிபரப்பவோ அல்லது சுரண்டவோ செய்யாதவர்; மற்றும், செயலியையும் மற்றும்/அல்லது சேவைகளையும் சிதைக்கவோ அல்லது பின்னோக்கு பொறியியலைப் பயன்படுத்தி அடிப்படைகளைக் கண்டுபிடிக்கவோ அல்லது செயலியை பிரித்துப் பார்க்கச் செய்யாதவர்; மற்றும்,

செயலியையும் மற்றும்/அல்லது சேவைகளையும் அவற்றின் ஏதோ ஒரு பகுதியை mirror அல்லது frameடன் இணைக்காதவர்; மற்றும், ஸ்க்ரேப்பிங், இண்டெக்ஸிங், சர்வேயிங் நோக்கங்களுக்காக வேறு புரோகிராம்களை அல்லது ஸ்க்ரிப்ட்டுகளை உண்டாக்க அல்லது லாஞ்ச் செய்யாதவர்; அல்லது வேறுவகையில் செயலி மற்றும்/அல்லது சேவைகளின் எந்தப் பகுதியையும் டேட்டா மைனிங் செய்யாதவர்; சேவைகளின் எந்தவொரு அம்சத்தின் இயக்கம் மற்றும் செயல்பாட்டின்மீது தேவையற்ற சுமையை ஏற்றாதவர் அல்லது அதற்கு இடையூறு செய்யாதவர்; சேவைகளின் ஏதேனும் ஓர் அம்சத்தை அல்லது அதன் தொடர்புடையதை அல்லது நெட்வொர்க்கை அனுமதியின்றி அணுகாதவர் அல்லது பாதிப்பு ஏற்படுத்த முயற்சிக்காதவர்.

உரிமை:

செயலி மற்றும் சேவைகள் மற்றும் அதில் காணப்படும் அனைத்து உரிமைகளும் சிஞ்ச் ஃப்யூலின் உடைமையாக இருக்கின்றன; அவ்வாறே இருக்கும். மேலே குறிப்பிட்டவாறு வரம்பிற்குட்பட்ட உரிமங்கள் வழங்கப்பட்டவை தவிர்த்து, சிஞ்ச் ஃப்யூலின் நிறுவன பெயர், லோகோக்கள், எரிபொருள், சேவைப் பெயர்கள், வணிக முத்திரைகள் அல்லது service marks அல்லது சிஞ்ச் ஃப்யூலின் உரிம தாரர்களுடையதைப் பயன்படுத்த அல்லது ஏதோ வகையில் குறிப்பிடுவதற்கு இந்த விதிமுறைகளோ அல்லது பயனர் சிஞ்ச் ஃப்யூல் செயலியைப் பயன்படுத்துவதோ அல்லது அதற்கான அனுமதியோ, பயனருக்கு எவ்வித உரிமைகளையும் அளிப்பதில்லை. (செயலிகள் அல்லது சேவைகளில் உள்ளவை அல்லது தொடர்புடையவை)

உரிமம் பெறுவதற்காக பயனர் வைக்கும் தவறான உரிமை கோரல்கள்:

இந்தச் சேவைகளையோ அல்லது இந்த ஆவணத்தின் ஏதாவது ஒருபகுதியையோ பயன்படுத்த உரிமம் பெறுவதற்காகத் தவறான உரிமை கோரல் செய்வது, இந்தச் சேவைகளைப் பயனர் பயன்படுத்துவதைத் தானாகவே தகுதியிழப்பு செய்துவிடும். தவறான உரிமைகோரலுடன் இந்த சேவையைப் பயன்படுத்துவதை நிறுத்தவும் தவிர்க்கவும் பயனர் அறிவுறுத்தப்படுகிறார்; அவ்வாறின்றி, பயனர் தொடர்ந்து செய்தால், மோசடி செய்ததற்குப் பயனர் பொறுப்பாக்கப்பட்டு அவர்மேல் வழக்கும் தொடரப்படும்.

சேவைகளைப் பயன்படுத்த விதிமுறைகள்:

கணக்கு:


சேவைகளை, பயனர் பயன்படுத்த, பயனர்-கணக்கு (”கணக்கு”) ஒன்றைப் பதிவு செய்து, அதனைப் பராமரிக்க வேண்டும். இந்தக் கணக்கைத் தொடங்க பயனர் வயது வந்தவராகவும் இந்தியாவிற்குள் வசிப்பவராகவும் இருக்கவேண்டும். பயனருக்குச் சொந்தமான அல்லது அவர் பயன்படுத்துவதற்கு அனுமதியுள்ள இயங்கிக்கொண்டிருக்கும் மொபைல்/செல்பேசி எண்ணுடன் இந்தக் கணக்கு இணைக்கப்படும். கணக்குப் பதிவு செய்யப்படுவதற்கு, பயனர், அவரது பெயர், முகவரி, மொபல்/செல் எண், வயது உள்ளிட்ட தனிநபர் விவரங்களையும், வாகன விவரம் (மேக், மாடல், ஆண்டு, நிறம், உரிமம்/பதிவு எண்), மற்றும் இவற்றுடன் குறைந்த பட்சம் ஒரு பணம் செலுத்தும் முறையையும் சிஞ்ச் ஃப்யூலுக்கு அளிக்கவேண்டும். Payment method அவருடையதாகவோ அல்லது பயனர் பயன்படுத்த அனுமதி இருக்கக்கூடியதாகவோ (கடன் அட்டை/டெபிட் அட்டை/ இணைய வங்கி/ஈ வாலட்/ அல்லது ஏற்றுக்கொள்ளப்பட்ட பிற Payment method) இருக்கவேண்டும்.

கணக்கைத் துல்லியமாகப் பராமரிக்கவும் அவ்வப்போது தகவல்களைப் புதுப்பிக்கவும் பயனர் ஒப்புக்கொள்கிறார். அவ்வாறு செய்ய தவறுவது சேவையை அணுகுவதிலும் பயன்படுத்துவதிலும் இயலாத நிலையை ஏற்படுத்தும். சிஞ்ச் ஃப்யூல், பயனருடனான ஒப்பந்தத்தை ரத்து செய்துவிடலாம். மேலும், கணக்குத் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளுக்கும் பயனரே முற்றிலும் பொறுப்பு; கணக்கினுடைய பயனர் பெயரையும் கடவுச்சொல்லையும் எல்லா நேரங்களிலும் ரகசியமாக வைத்திருக்க பயனர் ஒப்புக்கொள்கிறார். சிஞ்ச் ஃப்யூல் அனுமதித்தாலன்றி, பயனர் ஒரு கணக்கு மட்டும் வைத்துக்கொள்ள முடியும்.

இந்த சேவைகளைப் பயன்படுத்துவதன் மூலம், சிஞ்ச் ஃப்யூல் கொள்முதல் செய்த பொருளை, அது எந்த பிராண்டை சேர்ந்த பொருளாக இருந்தாலும் (அங்கீகரிக்கப்பட்ட ஆயில் நிறுவனத்திலிருந்து, அதாவது, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிட்., பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், எஸ்ஸார் ஆயில், ரிலையன்ஸ் பெட்ரோலியம், ஷெல் போன்றவை உள்ளிட்ட [ஆனால், இவை மட்டுமல்ல] நிறுவனங்களிடமிருந்து எரிபொருள் கொள்முதல் செய்யப்படவேண்டும்), எரிபொருள் கொள்முதல் செய்யப்பட்ட இடத்தையும், (ஓர் ஆயில் நிறுவனத்தால், அரசாங்க நிறுவனத்தால் அல்லது ஒரு ஆயில் கம்பெனியின் விற்பனையாளர்களால் இயக்கப்படும், [ஆனால், இவை மட்டுமல்ல] எரிபொருள் நிரப்பும் நிலையம், retail pump outlet, ஓர் ஆயில் நிறுவனத்தால் அல்லது ஆயில் நிறுவனத்தின் விற்பனையாளரால் நடத்தப்படும் டீசல் நிலையம்), பயனர் இதன்மூலம் ஒப்புக்கொள்ளவும், ஏற்கவும் செய்கிறார்.

எரிபொருளைக் கொள்முதல் செய்ததற்காக, பயனரின் சார்பாக சிஞ்ச் ஃப்யூல் கட்டணம் செலுத்துவதற்குப் பயனர் ஒப்புக்கொள்கிறார்; அதிகாரமளிக்கிறார். பயனரின் முகவராக சிஞ்ச் ஃப்யூல் செயல்படுவதால், பயனரின் சார்பாக எரிபொருளுக்காக சிஞ்ச் ஃப்யூல் பணம் செலுத்தினாலும், கொள்முதல் செய்யும்போது, பயனரின் பெயரில்தான் ரசீதோ அல்லது இன்வாய்ஸோ இருக்கும் என்பதைப் பயனர் ஒப்புக்கொள்கிறார். இந்த விஷயத்தில் பயனரின் முகவராகச் செயல்படும் நிலையில், சிஞ்ச் ஃப்யூல் செலுத்தும் கட்டணங்கள், சிஞ்ச் ஃப்யூலுக்கு திருப்பித் தரப்படும்; இந்தக் கட்டணங்கள், கொள்முதல் செய்யப்பட்ட எரிபொருளின் அசல் விலையாகும்; இதில் செலுத்தவேண்டிய அனைத்து வரிகளும் அடங்கும்; பயனரே பொருளைக் கொள்முதல் செய்ததுபோல், சிஞ்ச் ஃப்யூல் பரிவர்த்தனையை நடத்திமுடிக்கும். பயனர் இதற்கு ஒப்புக்கொள்கிறார், ஏற்றுக்கொண்டு பணம் செலுத்துகிறார்: இந்தக் கட்டணங்களை அவர் மறுப்பதில்லை.

இந்தச் சேவைகளைப் பயன்படுத்துவதன் மூலம், பயனரின் சார்பாகக் கொள்முதல் செய்யப்பட்ட எரிபொருளை, பயனர் தெரிந்தெடுக்கும் இடத்திற்குப் பயனரின் சார்பாக பொருளை ட்ரான்ஸ்போர்ட் செய்வதற்குப் பயனர் தெரிந்தெடுக்கும் ஒரு கண்டைனரில் transfer செய்வதற்கு, சிஞ்ச் ஃப்யூலின் சாதனத்தை ஆபரேட்டர் உதவியுடன் வாடகைக்கு எடுக்கவோ/குத்தகைக்கு எடுக்கவோ பயனர் இதன்மூலம் ஒப்புக் கொள்கிறார். திட்டமிட்டபடி பொருளை ட்ரான்ஸ்போர்ட் செய்வதற்கும், பயனரின் சார்பாக அந்தப் பொருளை transfer செய்வதற்கும் கட்டணம் செலுத்தப்பட வேண்டும். இந்தக் கட்டணங்கள் மீதான பொருத்தமான சேவை வரியும் பயனர்மீது விதிக்கப்படும். இதற்குப் பயனர் ஒப்புக்கொள்கிறார்; இந்தக் கட்டணங்களை அவர் மறுப்பதில்லை.

இந்தச் சேவைகளைப் பயன்படுத்துவதன் மூலம், பயனர், இந்தப் பொருளை இந்தியாவில் சந்தைப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள நிறுவனத்தால் நியமிக்கப்பட்ட ஒரு விற்பனையாளரோ/முகவரோ/விநியோகஸ்தரோ இல்லை என்பதை ஒப்புக்கொள்கிறார்; பயனர், ஏதேனும் ஓர் அரசாங்க ஏஜென்ஸியிலிருந்தோ அல்லது ஆயில் நிறுவனத்திலிருந்தோ எரிபொருளைக் கொள்முதல் செய்வதற்கு தடைசெய்யப்பட்ட ஒரு தனிநபரோ அல்லது நிறுவனமோ அல்ல என்பதை ஏற்கிறார். இந்த விஷயத்திலோ அல்லது இந்த ஆவணத்தின் ஏதாவது ஒரு பிரிவிலோ தவறான உரிமைகோரலைச் செய்வது இந்தச் சேவைகளைப் பயனர் பயன்படுத்துவதிலிருந்து தானாகவே பயனாளரைத் தகுதியிழப்பிற்கு ஆளாக்கிவிடும். தவறான உரிமைகோரல் செய்வதை நிறுத்தவும், தவிர்க்கவும் பயனர் அறிவுறுத்தப்படுகிறார்; பயனர் அவ்வாறு தொடர்ந்து செய்தால், சிஞ்ச் ஃப்யூலுடன் அவர் மோசடி செய்தார் என்று பொறுப்பாக்கப்பட்டு வழக்குத் தொடரப்படுவதற்கு உரியவராகிறார்.

(பொருத்தமான சட்டத்தோடு தொடர்புடைய அனைத்து உட்பிரிவுகளும், வழக்கு தொடர்வதற்கு சிஞ்ச் ஃப்யூலால் பயன்படுத்தப்படும்; ஒப்பந்தம்/உடன்படிக்கை மீறல் அடிப்படையில் சட்டரீதியாக புகார் அளிக்கப்பட்டால், பயனர் வழுவினார் என்பதை சிஞ்ச் ஃப்யூல் கண்டுபிடித்தால் அல்லது சிஞ்ச் ஃப்யூலுக்குத் தெரிவிக்கப்பட்டால், மேலும் ஏதேனும் ஓர் ஏஜென்சி குற்றச்சாட்டு ஒன்றை வலியுறுத்தும்போதோ அதற்காக வழக்குத் தொடரப்படும் நிலையில், அதைச் செய்யும் பிற ஏஜென்சிக்கோ அரசாங்கத்திற்கோ அல்லது பொதுமக்களுக்கோ உதவிட ஒத்துழைப்புத் தருவதாக சிஞ்ச் ஃப்யூல் அறிவிக்கிறது).

சேவைகளைப் பயன்படுத்துவதன் மூலம் பயனர், கணக்குப் பதிவு செய்ய பயன்படுத்தப்படும் மொபைல்/செல்பேசி எண் பயனருக்குச் சொந்தமானதாகவோ அல்லது சிஞ்ச் ஃப்யூலுடன் கணக்குப் பதிவு செய்யும் அந்தக் குறிப்பிட்ட நோக்கத்திற்கு அதனைப் பயன்படுத்தப் பயனர் அதிகாரம் பெற்றதாக இருக்கவேண்டும் என்பதை இதன்மூலம் ஏற்கிறார். சிஞ்ச் ஃப்யூல் அளிக்கும் சேவைகளுக்குப் பயன்படுத்தப்படும் பணம் செலுத்தும் முறை, பயனருக்குச் சொந்தமானதாகவோ அல்லது சேவைகளுக்குப் பணம் செலுத்தும் அந்தக் குறிப்பிட்ட நோக்கத்திற்கு, அந்தப் பணம் செலுத்தும் முறையைப் பயன்படுத்தப் பயனர் அதிகாரம் பெற்றதாக இருக்கவேண்டும்.

வரிகள், லெவி, கட்டணங்கள், கூடுதல் கட்டணங்கள், செஸ், உள்ளிட்ட கொள்முதல், ட்ரான்ஸ்போர்ட், சட்டப்பூர்வமான கட்டணங்கள் மற்றும் கட்டணம் செலுத்தும் வசதிக்கான கட்டணங்கள் அனைத்தையும் மற்றும் பொருத்தமான கட்டணங்களையும் சிஞ்ச் ஃப்யூலுக்கு செலுத்துவதற்கு ஒப்புக்கொள்கிறார்; மற்றும், பயனர், அவரது சொந்த விருப்பத்தின்படி தான் செயல்படுகிறார்; சேவைகளைப் பயன்படுத்தும்போது ஆவணத்தில் குறிப்பிடப்படும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் (பகுதி I மற்றும் VI) அவரைக் கட்டுப்படுத்தும்; பயனர் எடுக்கும் அனைத்து செயல்பாடுகளுக்கும் அவரே முற்றிலும் பொறுப்பானவர் என்பதை ஏற்கிறார்; மற்றும், எரிபொருளை டெலிவரி செய்யும் நேரத்தில் மற்றும் எரிபொருளை transfer செய்யும் நேரத்தில் (அசையும் மற்றும் அசையா) சொத்தை அணுகுவதற்கான உரிமை மற்றும் சலுகைகளைப் பெற ஒப்புதல் அளிக்கிறார் (பார்க்க பகுதி V : பொறுப்புத் துறப்பு, பொறுப்பு வரம்பு மற்றும் இழப்புக் காப்பீடு); மற்றும், மூன்றாம் தரப்பினருக்கு அவர்களுடைய கணக்கைப் பயன்படுத்த அனுமதி தராமலிருக்கவும், வேறு ஒரு நபருக்கோ அல்லது நிறுவனத்திற்கோ கணக்கை ஒதுக்காமலோ அல்லது transfer செய்யாமலோ இருக்கவும், சேவைகளைப் பயன்படுத்தும்போது பொருத்தமான அனைத்து சட்டங்களுடனும் இசைந்து போவதற்கும், சேவைகளை சட்டப்பூர்வமான நோக்கங்களுக்கு மட்டுமே பயன்படுத்துவதற்கும், ஒப்புக் கொள்கிறார்; மற்றும், சிஞ்ச் ஃப்யூலுக்கோ அல்லது வேறு ஒரு நபருக்குத் தொந்தரவு அளிக்கவோ, அசௌகரியம் ஏற்படுத்தவோ, அல்லது (அசையும் அல்லது அசையா) சொத்துகளுக்குச் சேதம் ஏற்படும் வகையிலோ சேவைகள் பயன்படுத்தப்பட மாட்டாது என்றும், சில சந்தர்ப்பங்களில், சேவைகளை அணுகவோ அல்லது பயன்படுத்தவோ, அடையாளச் சான்றை அளிக்குமாறு பயனர் கோரப்படலாம்; குறிப்பிடப்பட்டுள்ள நிறுவனங்களின் ஒப்புதலைச் சரிபார்க்க, பயனர் அவ்வாறு அடையாளச் சான்று அளிக்க மறுத்தால் பயனர் சேவைகளை அணுகுவது மறுக்கப்படலாம் என்பதையும், சிஞ்ச் ஃப்யூலிடம் பயனர் பகிர்ந்து கொண்டிருக்கும் அனைத்துத் தகவல்களும் உண்மையாகவே சரியானவை மற்றும் துல்லியமானவை என்றும் ஒப்புக்கொள்கிறார்; மற்றும், கொள்முதல் செய்யப்பட்ட எரிபொருள் தொடர்பாக அதன் தரம் குறித்த பிரச்சனைகள் இருந்தால், பயனர் தனது உரிமைகோரல்கள் அனைத்தையும், பயனரின் சார்பாக அவரது முகவராக செயல்பட்டு சிஞ்ச் ஃப்யூல் எந்த இடத்தில் எரிபொருளைக் கொள்முதல் செய்ததோ அங்கு அனுப்பவேண்டும் என்பதை ஏற்கிறார்;

Reimbursements /Paybacks/ கேஷ் பேக்/points/miles உள்ளிட்ட, ஆனால் இவை மட்டுமே அல்ல), ஏதாவதொரு மற்றும் அனைத்துப் பலன்களும், அவை பயனரின் சார்பாக எரிபொருளைக் கொள்முதல் செய்யும்போது பெற்றவையோ அல்லது இல்லையோ, மற்றும்/அல்லது பணமற்ற பரிவர்த்தனைகளைப் பயன்படுத்துவதால் கிடைத்தவையோ அல்லது இல்லையோ, அவை சிஞ்ச் ஃப்யூலுக்கு சொந்தமான முழுமையான சொத்தாகின்றன. அத்தகைய பலன்கள்மீது உரிமை கோரல் ஏதுமில்லை என்று இதன் மூலம் பயனர் அங்கீகரிக்கிறார் மற்றும் ஒப்புக்கொள்கிறார். மேலும், residual உரிமைகோரல் ஒன்றை அது தூண்டினாலும், அதுபோன்ற எந்தவொரு residual உரிமை கோரல்களையும் பணமாக்கும் வகையில் சிஞ்ச் ஃப்யூலுக்கு transfer செய்யப் பயனர் ஒப்புக்கொள்கிறார். இதன்மூலம் நேரடியான மற்றும் மறைமுகமான உரிமைகோரல்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்கிறார்; தொடர்ந்து அத்தகைய பலன்கள் அனைத்தையும் சிஞ்ச் ஃப்யூலுக்கு மாற்றித்தருகிறார்.

டெக்ஸ்ட்/குறுஞ்செய்தி அனுப்புதல்:

இந்தக் கணக்கை உருவாக்குவதன் மூலம், இந்தச் சேவைகளை பயன்படுத்துவதன் மூலம், தகவல் தெரிவிக்கும் குறுஞ்செய்திகளை (குறுஞ்செய்தி) பெறுவதற்குப் பயனர் ஒப்புதல் அளிக்கிறார்.

பயனர்-வழங்கும் உள்ளடக்கம்:

சிஞ்ச் ஃப்யூல் அதன் சொந்த விருப்பத்தின் படி, சேவைகள் குறித்த விளக்கங்களையும் மற்றும் கருத்துப் பின்னூட்டம் உள்ளிட்ட செய்திகளையும், ஆடியோ விசுவல் படங்களையும், தகவல்களையும் அளிக்கவோ, பதிவேற்றம் செய்யவோ அல்லது கிடைக்கச் செய்திடவோ பயனரை அனுமதிக்கிறது அல்லது வேண்டுகிறது. (”பயனர் உள்ளடக்கம்”). பயனர்-உள்ளடக்கத்தை சிஞ்ச் ஃப்யூலுக்கு வழங்குவதன் மூலம், சிஞ்ச் ஃப்யூலுக்கு உலகளாவிய, நிரந்தரமான, மாற்றமுடியாத, திரும்பப்பெறமுடியாத, ராயல்டி இல்லாத உரிமத்தை அளிப்பதற்குப் பயனர் ஒப்புக்கொள்கிறார்; பயனருக்கு மேலதிக அறிவிப்புத் தராமல் அல்லது பயனரின் ஒப்புதல் இல்லாமல், மற்றும் பயனருக்கோ அல்லது வேறு நபருக்கோ அல்லது நிறுவனத்திற்கோ பணம் செலுத்தும் தேவை ஏதுமின்றி துணை உரிமம் அளித்தல், நகலைப் பயன்படுத்தல், மாற்றம் செய்தல், அதிலிருந்து வேறுவகைப் படைப்புகளை உருவாக்கல், டெலிவரி செய்தல், பொதுவெளியில் காட்சிப்படுத்துதல், பொதுவெளியில் நிகழ்த்துதல், அல்லது வேறுவகையில் பயனரின் உள்ளடக்கத்தைப் பயன்படுத்துதல் (சிஞ்ச் ஃப்யூலின் சேவைகள் தொடர்பான மற்றும் சிஞ்ச் ஃப்யூலின் வணிகம் மற்றும் மூன்றாம் தரப்பினரின் தளங்கள் மற்றும் சேவைகள் உள்ளிட்ட) அனைத்திற்கும் ஒப்புக்கொள்கிறார்.

நெட்வொர்க் அணுகல் மற்றும் சாதனங்கள் (Devices):

சேவைகளைப் பயன்படுத்துவதற்குத் தேவையான டேட்டா நெட்நொர்க் அணுகலைப் பெறுவது முற்றிலும் பயனரின் பொறுப்பாகும். பயனர், வயர்லெஸ் வசதியுள்ள கருவியின் மூலம் சேவைகளை அணுகினாலோ அல்லது பயன்படுத்தினாலோ, பயனரின் மொபைல்/செல்பேசி நெட்வொர்க் டேட்டாவும் மற்றும் அதற்குரிய கட்டணங்களும் இதற்கும் பொருந்தும். சேவைகளையும் செயலியையும் மற்றும் அவ்வப்போது புதுப்பிக்கப்படும் தகவல்களை அறிந்துகொள்ளவும், பயன்படுத்தவும் பொருத்தமான hardware அல்லது சாதனங்களை வாங்குவதும் மற்றும் புதுப்பித்துக்கொள்வதும் பயனரின் பொறுப்பு. சேவைகளோ அல்லது அதனுடைய ஒரு பிரிவோ, ஒரு குறிப்பிட்ட கருவியில் அல்லது சாதனத்தில்தான் செயல்படும் என்று சிஞ்ச் ஃப்யூல் உத்தரவாதம் அளிக்கவில்லை. மேலும், சேவைகள், பிழைச்செயல்பாடுகளுக்கு ஆளாகக்கூடியவை; இணையம் மற்றும் மின்னணு தகவல் தொடர்பில் தாமதம் என்பது உள்ளார்ந்தே உள்ளது என்பதையும் பயனர் அறிந்திருக்க வேண்டும்.

சேவைகளைப் பயன்படுத்தப் பயனர் செய்யும் தவறான உரிமை கோரல்:

சேவைகளையும் அல்லது ஆவணத்தின் ஏதோ ஒரு பிரிவையும் பயன்படுத்த உரிமம் பெறுவதற்காகத் தவறான உரிமை கோரல் செய்வது, சேவைகளைப் பயனர் பயன்படுத்துவதைத் தானாகவே தகுதியிழப்பு செய்துவிடும். அவ்வாறு தவறான உரிமைகோரல் செய்து சேவைகளைப் பயன்படுத்த வேண்டாம், தவிர்க்கவேண்டும் என்று பயனர் அறிவுறுத்தப்படுகிறார். அவ்வாறு பயனர் தொடர்ந்து செய்தால், சிஞ்ச் ஃப்யூலுடன் அவர் மோசடி செய்ததாக பொறுப்பாக்கப்பட்டு வழக்குத் தொடரப்படுவதற்கு உரியவராகிறார்.

பணம் செலுத்துதல்:

பயனர் பின்வருவனவற்றைப் புரிந்துகொள்கிறார், அங்கீகரிக்கிறார்; ஏற்றுக்கொள்கிறார்:

சேவைகளைப் பயன்படுத்துவதால் கட்டணம் செலுத்தவேண்டிய நிலை பயனருக்கு ஏற்படுகிறது (”கட்டணங்கள்”).

சிஞ்ச் ஃப்யூல், பயனரின் சார்பாக, பயனரின் முகவராக, கொள்முதல் செய்த (அங்கீகரிக்கப்பட்ட அரசாங்க ஏஜென்சி, ஓர் ஆயில் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளரிடமிருந்து [தனியார் அல்லது பொதுத்துறை] வாங்குவது) எரிபொருளுக்கான கட்டணம், இந்தக் கட்டணத்தில் அடங்கும். இந்தக் கட்டணம் அனைத்து வரிகளும் உள்ளிட்ட கொள்முதல் செய்யப்பட்ட பொருளின் அசல் விலையாகும். பயனரே பொருளைக் கொள்முதல் செய்ததுபோல், சிஞ்ச் ஃப்யூல் பரிவர்த்தனையை simulate செய்யும். இந்தக் கட்டணங்களைப் பயனர் மறுக்கவோ அல்லது எதிர்க்கவோ இல்லையென ஒப்புக்கொள்கிறார். பில்/இன்வாய்ஸ் பயனரின் பெயரில்தான் இருக்கும். பயனரின் சார்பாக, பயனரின் முகவராகச் செயல்பட்டு சிஞ்ச் ஃப்யூல் கட்டணத்தைச் செலுத்துவதற்கு பயனர் அனுமதிக்கிறார். மேலும் இதனால் ஏற்படும் கட்டணங்களைத் திருப்பிச் செலுத்தவும் பயனர் ஒப்புக்கொள்கிறார்.

திட்டமிட்டபடி எரிபொருளை ட்ரான்ஸ்போர்ட் செய்வதற்கும் பயனரின் சார்பாகக் கொள்முதல் செய்யப்பட்ட எரிபொருளை transfer செய்வதற்கும் கட்டணங்கள் பொருந்தும். இந்தக் கட்டணங்கள் மீது பொருத்தமான சேவை வரியும் பயனரின்மீது விதிக்கப்படும். இந்தக் கட்டணங்களைப் பயனர் மறுக்கவோ அல்லது எதிர்க்கவோ இல்லையென ஒப்புக்கொள்கிறார்.

சிஞ்ச் ஃப்யூலுக்கு முற்றிலும் சொந்தமானதாக அமைந்திருக்கும் பலன்களிலிருந்து (அவை பயனரின் சார்பாக எரிபொருளைக் கொள்முதல் செய்யும்போது பெற்றவையோ அல்லது இல்லையோ, மற்றும்/அல்லது பணமற்ற பரிவர்த்தனைகளைப் பயன்படுத்துவதால் கிடைத்தவையோ அல்லது இல்லையோ, reimbursements /Paybacks/கேஷ் பேக்/points/miles உள்ளிட்ட, ஆனால் இவை மட்டுமல்ல) கட்டணங்களின் பகுதியைப் பெறுவதற்குப் பயனர் அங்கீகரிக்கிறார். அத்தகைய பலன்கள்மீது உரிமை கோரல் ஏதுமில்லை என்று இதன் மூலம் பயனர் அங்கீகரிக்கிறார் மற்றும் ஒப்புக்கொள்கிறார். மேலும், ஒருவேளை residual உரிமைகோரல் ஒன்று இருந்தாலும், அதனை அல்லது அனைத்து residual உரிமைகோரல்களையும் monetize செய்வதற்கு சிஞ்ச் ஃப்யூலுக்கு மாற்றப் பயனர் ஒப்புக்கொள்கிறார். இதன்மூலம் அனைத்து நேரடியான மற்றும் மறைமுக உரிமைகோரல்களையும் உரிமைகளையும் தள்ளுபடி செய்கிறார்; அவற்றை சிஞ்ச் ஃப்யூலுக்கு மாற்றித்தருகிறார். இந்தக் கட்டணங்கள் பயனரின் பில்லில் பிரதிபலிக்க மாட்டா.

எரிபொருளை (பயனரின் சார்பாக பயனரின் முகவராக, சிஞ்ச் ஃப்யூல் கொள்முதல் செய்து, பின்னர் பயனர் தெரிந்தெடுத்த இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட) ஏற்றுக்கொள்ளக் கூடாதென்று பயனர் முடிவெடுத்தாலும், மேலே விவரிக்கப்பட்ட பொருத்தமான கட்டணங்களைச் செலுத்த கடமைப்பட்டவர் என்பதைப் பயனர் ஒப்புக்கொள்கிறார். ஒருவேளை எரிபொருளைப் பயனர் ஏற்றுக்கொள்ள வில்லை என்றால், சிஞ்ச் ஃப்யூல் அந்த எரிபொருளைப் பொருத்தமான வகையில் சுதந்திரமான முறையில் அப்புறப்படுத்தப் பயனர் ஒப்புக்கொள்கிறார், ஏற்றுக்கொள்கிறார்; அல்லது பொருத்தமானது என்று நினைக்கும் வகையில் அந்த எரிபொருளை சிஞ்ச் ஃப்யூல் பயன்படுத்தவும் ஒப்புக்கொள்கிறார்; மேலும் கொள்முதல் செய்யப்பட்ட அந்த எரிபொருளின் மீதான அனைத்து உரிமைகளையும் பயனர் கைவிடுகிறார்.

அனைத்துக் கட்டணங்களும் உடனடியாக செலுத்தப்பட வேண்டும். பயனரின் கணக்கில் குறிப்பிடப்பட்டுள்ள, தெரிந்தெடுக்கப்பட்ட பணம் செலுத்தும் முறையைப் பயன்படுத்தி சிஞ்ச் ஃப்யூல் மூலம் கட்டணம் செலுத்தப்படும். அதன்பிறகு, மின்னஞ்சல் வழியாக சிஞ்ச் ஃப்யூல் பயனருக்கு ரசீதை அனுப்பிவைக்கும். பயனரின் முதன்மைக் கணக்கில் குறிப்பிடப்பட்டிருக்கும் பணம் செலுத்தும் முறை காலாவதியானது, பயன்படுத்தtத் தகுதியற்றது அல்லது அதன் வழியாகக் கட்டணம் வசூலிக்க முடியாது என்று தீர்மானிக்கப்பட்டால், கணக்கில் குறிப்பிடப்பட்டிருக்கும் இரண்டாவது பணம் செலுத்தும் முறையை சிஞ்ச் ஃப்யூல் பயன்படுத்தப் பயனர் ஒப்புக்கொள்கிறார்.

கட்டணம் செலுத்த, குறிப்பிட்ட தேதியிலிருந்து 7 வேலை நாட்களுக்கு மேல் பயனர் தாமதம் செய்தால், மொத்தத் தொகையில் ஆண்டிற்கு 24% வட்டி செலுத்த வேண்டியிருக்கும்.

பயனருக்கும் சிஞ்ச் ஃப்யூலுக்கும் இடையில், சேவைகளைப் பயன்படுத்தி பெறக்கூடிய அனைத்துச் சேவைகளுக்கும் அல்லது சரக்குகளுக்கும் அல்லது ஏதேனும் ஒன்றுக்கு எந்த நேரத்திலும் கட்டணத்தை (பொருத்தமான) நிர்ணயிப்பதும், நீக்குவதும், மாற்றுவதும் சிஞ்ச் ஃப்யூலின் சொந்த முடிவாகும். சிஞ்ச் ஃப்யூல் அவ்வப்போது சில பயனர்களுக்கு promotional offers, தள்ளுபடிகளை அளிக்கக்கூடும்; அதனால், சேவைகள் மூலம் பெறக்கூடிய ஒரேவிதமான அல்லது ஒத்த சேவைகளுக்கு அல்லது சரக்குகளுக்கு வேறுபட்ட கட்டணம் விதிக்கப்பட நேரும். குறிப்பிட்ட பயனருக்கு இந்த promotional offers அல்லது தள்ளுபடிகள் அளிக்கப்பட்டாலொழிய, சேவைகள் பயன்படுத்துவதிலும் அல்லது கேள்விக்குரிய பயனருக்கு விதிக்கப்படும் கட்டணங்கள் மீதும் இவை எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தாது. எரிபொருள் கொள்முதல் செய்யப்பட்டதை உறுதிப்படுத்தும் செய்தி சிஞ்ச் ஃப்யூலிடமிருந்து பெறப்படுவதற்கு முன்பாக, பயனர் சேவைக்கான வேண்டுகோளை ரத்துசெய்வதைத் தேர்ந்தெடுக்கலாம். அத்தகைய தருணத்தில் பயனர் மீது ரத்து செய்ததற்கான கட்டணம் விதிக்கப்படும்.

எந்த ஆபரேட்டருக்கும் கிராஜுட்டி என்ற பெயரில் கூடுதல் கட்டணத்தை அளிப்பதற்குப் பயனருக்குச் சுதந்திரம் இருக்கிறது என்பதைப் பயனர் புரிந்துகொள்கிறார் என்றாலும் அவ்வாறு செய்வதற்கான எவ்வித கட்டாயமும் பயனருக்கு இல்லை. கிராஜுட்டி என்பது எப்போதும் தாமே முன்வந்து அளிப்பது.

குறிப்பிட்ட பணம் செலுத்தும் முறையின்மீது பொருத்தமான கட்டணங்கள் மற்றும் வரிகளை விதிக்க பயனர் வெளிப்படையாக அனுமதிக்கிறார்; மற்றும் முறையான கால இடைவெளியில் வரிகளையும் இதர கட்டணங்களையும் விதிப்பதற்கும்; அனைத்துமே குறிப்பிட்ட உறுப்பினர் நிலை மற்றும் பயன்படுத்தப்பட்ட சேவைகளைப் பொறுத்தவை.

பயனர் தனது கணக்கை ரத்து செய்யமுடியும் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம்; ஆனால், சிஞ்ச் ஃப்யூல் ரீஃபண்ட் எதையும் அளிக்காது என்பதை தயவுசெய்து அறிந்துகொள்ளுங்கள்; மேலும் கணக்கிலிருக்கும் எந்த நிலுவைத் தொகையையும் செலுத்தவேண்டிய பொறுப்பு பயனருக்கும் உண்டு. செலுத்தப்படாத கட்டணம் எதையும், கொடுக்கப்பட்டிருக்கும் பணம் செலுத்தும் முறையின் மூலம் சிஞ்ச் ஃப்யூல் வசூல் செய்யும் என்பதைப் பயனர் ஒப்புக்கொள்கிறார்; அத்தகைய செலுத்தப்படாத கட்டணத்திற்கு, பயனருக்கு பில் ஒன்றை சிஞ்ச் ஃப்யூல் அனுப்புவிக்கும்.

அனைத்து சட்டப்பூர்வமான கட்டணங்களும், பணம் செலுத்தும் வசதிக்கான கட்டணங்கள், அதாவது, வரிகள், லெவி, கட்டணங்கள், துணைக்கட்டணங்கள், செஸ், ஃபீஸ் உள்ளிட்டவை, பொருத்தமான வகையில் விதிக்கப்படும். சிஞ்ச் ஃப்யூல் அளிக்கும் சேவைகளுக்குப் பயன்படும் பணம் செலுத்தும் முறை, பயனருக்குச் சொந்தமானதாகவோ அல்லது சேவைகளுக்குப் பணம் செலுத்தும் குறிப்பிட்ட அந்த நோக்கத்திற்கு அந்தப் பணம் செலுத்தும் முறையைப் பயன்படுத்த அதிகாரம் பெற்றவராகப் பயனர் இருக்கவேண்டும் என்பதைப் பயனர் இதன்மூலம் ஏற்றுக்கொள்கிறார்.

உரிமைத் துறப்பு; பொறுப்பு வரம்பு; இழப்புக் காப்பீடு:

சேவைகள், அந்தச் சூழலைப் பொறுத்து அவை கிடைக்கும் அடிப்படையில் அளிக்கப்படுகின்றன; வெளிப்படையாகவோ, மறைமுகவாகவோ அல்லது சட்டப்பூர்வமாகவோ, அல்லது இந்த விதிமுறைகளில் வெளிப்படையாகச் சொல்லப்படாத அனைத்து representations மற்றும் உத்தரவாதங்களையும், குறிப்பிட்ட நோக்கத்திற்கும் மற்றும் உரிமை மீறல் அல்லாதவைக்கும், merchantabilityக்கும் உரிய மறைமுக உத்தரவாதங்கள் உள்ளிட்ட அனைத்தையும் சிஞ்ச் ஃபூயுல் மறுக்கிறது. கூடுதலாக, நம்பகத்தன்மை காலக்கெடு, தரம், பொருந்தும் தன்மை, அல்லது சேவைகள் அல்லது ஏதேனுமொரு சேவை அல்லது சேவைகளைப் பயன்படுத்திக் கோரப்பட்ட எரிபொருள் (பயனரின் முகவராக சிஞ்ச் ஃப்யூல் கொள்முதல் செய்தது; விவரங்களுக்கு முந்தையதைப் படிக்கவும்) தொடர்பாக சிஞ்ச் ஃப்யூல் எந்த representationம், அல்லது உத்தரவாதமோ guaranteeயோ தராது; அல்லது தடங்கல்கள் ஏதுமற்றவையாக அல்லது பிழையற்றவையாகச் சேவைகள் இருக்கும் என்றோ, பயனருக்கு அளிக்கப்பட்ட எரிபொருளின் (பயனரின் முகவராக சிஞ்ச் ஃப்யூல் கொள்முதல் செய்தது; விவரங்களுக்கு முந்தையதைப் படிக்கவும்) தரம், பொருந்தும் தன்மை, safety ஆகியவற்றிற்கு உத்தரவாதமோ சிஞ்ச் ஃப்யூல் அளிக்காது. இந்தச் சேவைகள் மற்றும் ஏதேனும் ஒரு சேவை அல்லது பயனர் கோரிய சம்பந்தப்பட்ட எரிபொருள், பொருத்தமான சட்டம் அனுமதிக்கும் அதிகபட்சம் காலம் வரையிலும் பயனரிடம் மட்டுமே இருக்கும் வரை, பயன்பாட்டினால் ஏற்படும் மொத்த ரிஸ்க்கையும் பயனர் ஒப்புக்கொள்கிறார். சிஞ்ச் ஃப்யூல் எரிபொருள் எதையும் விற்பதில்லை,விற்பனைக்கு வைப்பதில்லை, சந்தைப்படுத்தவோ, எடுத்துச் சென்று விற்கவோ, வியாபாரம் செய்யவோ, சில்லறையாகவோ, மொத்தமாகவோ, சந்தைப்படுத்தலோ, promote செய்யவோ, விளம்பரமோ, அல்லது பப்ளிசிட்டியோ செய்வதில்லை. அங்கீகரிக்கப்படாத விற்பனையில் அல்லது அங்கீகரிக்கப்படாத பரிமாற்றத்தில் அல்லது அங்கீகரிக்கப்படாத கொள்முதல் பரிவர்த்தனையில் சிஞ்ச் ஃப்யூல் ஈடுபடுவதில்லை. ஆனால், பயனரின் முகவராக, பயனரின் சார்பாக எரிபொருளைக் கொள்முதல் செய்வதற்கு சிஞ்ச் ஃப்யூலை பயனர் அனுமதியளிக்கும் வகையில் தொழில்நுட்ப பணித்தளம் ஒன்றைப் பயனருக்கு அளிக்கிறது. பின்னர் அந்த எரிபொருளைப் பயனரின் சார்பாக, பயனர் தெரிந்தெடுக்கும் இடத்திற்கு ட்ரான்ஸ்போர்ட் செய்யும்; பயனரின் தெரிவின்படி ஒரு கண்டைனரில் transfer செய்து கொடுக்கும்.

பொறுப்பு வரம்பு:

சேவைகள் அல்லது எரிபொருள் பயன்படுத்துவது தொடர்பாக (பயனரின் முகவராக சிஞ்ச் ஃப்யூல் கொள்முதல் செய்தது; விவரங்களுக்கு முந்தையதைப் பார்க்கவும்) சேதாரங்கள் விளைவதற்குச் சாத்தியங்கள் உள்ளதென்று சிஞ்ச் ஃப்யூல் அறிவுறுத்தியிருந்தாலும், அது தொடர்பான, அல்லது அதனுடன் தொடர்புடைய அல்லது பயன்படுத்துவதால் ஏற்படும் மறைமுகமான, தற்செயலான, special, exemplary, punitive, consequential damages அல்லது இலாப இழப்பு, data இழப்பு, தனிநபர்களுக்கான காயம், சொத்துக்கு (அசையும் மற்றும் அசையா) ஏற்படும் இழப்பு உள்ளிட்ட நிகழ்விளைவான சேதாரங்களுக்கு சிஞ்ச் ஃப்யூல் பொறுப்பேற்காது. பயனர்கள் சேவைகளைப் பயன்படுத்துவதாலோ அல்லது நம்பியிருப்பதாலோ ஏற்படும் எவ்விதமான சேதாரத்திற்கும் அல்லது சேவைகளைப் பயன்படுத்தி (பயனரின் முகவராக சிஞ்ச் ஃப்யூல்) கொள்முதல் செய்த எரிபொருளைப் பயன்படுத்துவதாலோ அல்லது பயனரால் சேவைகளை அணுகவோ அல்லது பயன்படுத்தவோ இயலாமல் போனால் ஏற்படும் பொறுப்புகளுக்கோ அல்லது இழப்புகளுக்கோ சிஞ்ச் ஃப்யூல் பொறுப்பாக முடியாது. சிஞ்ச் ஃப்யூலின் கட்டுப்பாட்டில் இல்லாத காரணங்களால் ஏற்படும் தாமதத்திற்கோ அல்லது செயல்திறன் தோல்விக்கோ சிஞ்ச் ஃப்யூல் பொறுப்பாக மாட்டாது. கொள்முதல் செய்யப்பட்ட எரிபொருளின் தரம் சார்ந்த பிரச்சனைகள் இருந்தால், பயனரின் சார்பாக பயனரின் முகவராக சிஞ்ச் ஃப்யூல் எரிபொருளை வாங்கிய இடத்திற்கு அனைத்து உரிமைகோரல்களையும் அனுப்பவேண்டும் என்று பயனர் வழிகாட்டப்படுகிறார். பயனரின் சார்பாக பயனரின் முகவராக சிஞ்ச் ஃப்யூல் கொள்முதல் செய்த எரிபொருளின் தரம் சார்ந்த பிரச்சனைகளையொட்டி சிஞ்ச் ஃப்யூலிலிருந்து எழும் ஏதாவது அல்லது அனைத்து உரிமைகோரல்களுக்கும் இதன் மூலம் பயனர் இழப்பீடு காப்பு அளிக்கிறார். எந்த நேர்விலும் சிஞ்ச் ஃப்யூல் பயனரிடம் கோரும் சேவைகள் தொடர்பான அனைத்து சேதாரங்களும், இழப்புகளும் மற்றும் காஸஸ் ஆஃப் ஆக்‌ஷன் உள்ளிட்டவை மொத்த ரூபாய் பத்தாயிரத்தை (ரூ.10000) தாண்டக்கூடாது. கூடுதலாக, பின்வரும் ஏதேனும் ஒன்றால் பயனருக்கு ஏற்படும் சேதாரங்களுக்கும் அல்லது ஒப்பந்தத்தில் கூறப்பட்டிருக்கிறதோ அல்லது இல்லையோ, தொடர்புடைய, அலட்சியம் உள்ளிட்ட அல்லது வேறுவிதமான எதற்கும் சிஞ்ச் ஃப்யூல் பொறுப்பேற்காது. அல்லது, பயனரின் கண்டைனரிலிருந்து எரிபொருள் உறிஞ்சப்படுவதற்கும்,

அத்தகையப் பகுதிக்குள் நாங்கள் நுழைவதற்குப் பயனர் எங்களிடம் ஏதேனும் சாவி, பின் எண் அல்லது கடவுச் சொல் கொடுத்திருக்கிறாரோ இல்லையோ, ஒரு மூன்றாவது நபர் பயனரின் அசையும் அல்லது அசையா சொத்துகள் இருக்கும் பகுதிக்குள் நுழைவதற்கும்.

சேவைகளுடன் தொடர்புடையதோ இல்லையோ அந்த எரிபொருள் மற்றும் பயனரின் கண்டைனரை நிரப்ப பயன்பட்ட எரிபொருள் சிதறிப்போவதற்கும், பொறுப்பேற்காது

இந்தப் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்வதன் மூலம் மற்றும் சேவைகளைப் பயன்படுத்துவதன் மூலம் பயனரின் அசையும் அல்லது அசையா சொத்துகளுக்கோ அல்லது தனிப்பட்ட நபரின் real அல்லது tangible சொத்திற்கோ ஏற்படும் ஏதாவதொரு சேதாரம், அசையும் அல்லது அசையா சொத்துகளை சிஞ்ச் ஃப்யூல் அணுகுவதால் எழக்கூடிய அனைத்து சேதாரங்களுக்குமான பொறுப்புகளைப் பயனர் ஏற்கிறார். முன்னால் பட்டியலிடப்பட்டுள்ள நிகழ்வுகளின் காரணமாகவோ அல்லது அதன் தொடர்பாகவோ எழும் சேதாரத்தை நிவர்த்தி செய்வதற்கு இருக்கும் எந்தவொரு இன்சூரன்சும், இதன்கீழ் பயனர் காப்பீடு செய்திருக்கக்கூடும், அத்தகைய சேதாரம் எதையும் நிவர்த்தி செய்துகொள்வதற்கு ஆதாரமான இன்சூரன்ஸாக இருக்கலாம். சிஞ்ச் ஃப்யூல் காப்பீடு செய்யப்பட்டிருக்கிற எந்த இன்சூரன்சும், எந்தச் சேதாரத்தையும் நிவர்த்தி செய்யக்கூடிய முதன்மை ஆதாரமான இன்சூரன்சாக இருக்காது என்பதையும், சிஞ்ச் ஃப்யூலின் முழு விருப்பத்தின் படியும் தேர்வின் படியும்தான் அதனை அணுகமுடியும் அல்லது இல்லாமல் இருக்கலாம் என்பதையும் பயனர் புரிந்துகொள்கிறார் மற்றும் ஒப்புக் கொள்கிறார்.

பயன்படுத்துவதற்கான கட்டுப்பாடுகள்:

வலைத்தளத்தை மற்றும்/அல்லது சேவைகளைப் பயன்படுத்தும் பயனர்கள் பின் கூறப்படும் எந்த தகவல்களையும் host செய்யவோ, காட்சிப்படுத்தவோ, பதிவேற்றம் செய்யவோ, மாற்றவோ, வெளியீடு செய்யவோ, transmit செய்யவோ , புதுப்பிக்கவோ அல்லது பகிரவோ கூடாது:

வேறொருவருக்குச் சொந்தமானது மற்றும் அதன் மீது பயனருக்கு எவ்விதமான சொந்த உரிமையும் இல்லாதது;

மொத்தமாக தீங்கு விளைவிக்கும், துன்புறுத்தும், அவதூறு ஏற்படுத்தும், ஆபாசமான, போர்னோகிராஃபிக், paedophilic, libellous, மற்றொருவர் அந்தரங்கத்தில் அத்துமீறி நுழையக்கூடிய, வெறுக்கத்தக்க, அல்லது இனரீதியாக, பண்பாட்டு ரீதியாக ஆட்சேபிக்கக்கூடிய, இழிவுபடுத்தக்கூடிய, கறுப்புப்பணத்தை மாற்றுவதை அல்லது சூதாட்டத்தை ஊக்குவிக்கக்கூடிய அல்லது ஏதோவொருவிதத்தில் சட்டத்திற்கு புறம்பானவை;

மைனர்களுக்கு ஏதோவிதத்தில் தீங்கு விளைவிக்கக்கூடியவை;

பேடனட், வர்த்தக முத்திரை, பதிப்புரிமை அல்லது தனி உரிமைகளை மீறக்கூடியவை;

எங்கிருந்து அந்தச் செய்தி வந்திருக்கிறது என்பதை அறியமுடியாமல், விலாசதாரரை ஏமாற்றும் அல்லது தவறாக வழிநடத்தும் அல்லது முற்றிலும் குற்றத்தன்மையுள்ள அல்லது அச்சுறுத்தும் ஏதோ ஒரு தகவலை அனுப்புவது;

மற்றொரு நபரைப்போல் ஆள்மாறாட்டம் செய்பவை;

ஒரு கம்ப்யூட்டர் resourceன் செயல்பாட்டில் குறுக்கிடுகிற, அழிக்கிற அல்லது கட்டுப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட மென்பொருள் வைரஸ்கள், அல்லது வேறு கம்ப்யூட்டர் கோடு, கோப்புகள், அல்லது புரோகிராம்கள்; அல்லது,

இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, டிஃபென்ஸ், பாதுகாப்பு அல்லது இறையாண்மையை, வெளிநாடுகளுடனான நட்புறவை, அல்லது பொது ஒழுங்கை அச்சுறுத்துகிற அல்லது பிடியாணையின்றி கைது செய்யப்படக்கூடிய குற்றத்தைச் செய்வதற்குத் தூண்டுதல் உண்டாக்குகிற அல்லது எந்தவொரு குற்ற விசாரணையையும் தடுத்தல் அல்லது வேறு ஒரு நாட்டை அவமதிக்கும் செயல்கள்;

மேலே குறிப்பிடப்படும் எந்த ஒரு நிபந்தனைகளையும் மீறக்கூடியதாக இருக்கக்கூடிய எந்த உள்ளடக்கத்தையும் வலைத்தளத்திலிருந்து நீக்குவதற்கான உரிமையை சிஞ்ச் ஃப்யூல் தன்வசம் வைத்துள்ளது

உத்தரவாதங்கள் கோராமை:

உங்களது சொந்த ரிஸ்கில்தான் வலைத்தளத்தையும் சேவைகளையும் நீங்கள் பயன்படுத்துகிறீர்கள் என்பதை தயவுசெய்து அறிந்து கொள்ளுங்கள். அவை வெளிப்படையானவையோ அல்லது மறைமுகமானவையோ, வலைத்தள உள்ளடக்கம் குறித்த மூன்றாம் நபரின் உரிமைகளை மீறாதது, அல்லது வலைத்தளத்தின் உள்ளடக்கம் அல்லது productகளை நம்பியிருத்தல் அல்லது பயன்படுத்துவது உள்ளிட்ட, ஆனால், இவை மட்டுமேயல்ல, எவ்விதமான உத்தரவாதங்களையும் சிஞ்ச் ஃப்யூல் கைவிடுகிறது.

வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள உள்ளடக்கம் முழுமையானது, புதுப்பிக்கப்பட்டது அல்லது துல்லியமானது; அல்லது

வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள மூன்றாம் தரப்பு குறித்த தகவல்கள் அல்லது வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள மூன்றாம் தரப்பின் இணைப்புகள், துல்லியமானவை, நம்பகமானவை அல்லது முழுமையானவை என்றோ

சிஞ்ச் ஃப்யூல் எந்த உத்தரவாதமும் அளிப்பதுமில்லை:

சேவைகளைப் பயன்படுத்துவதற்குப் பயனரே பொறுப்பானவர்; சேவையைப் பயன்படுத்துவதால் எழுகிற அல்லது பின்வருவனவற்றுடன் ஏதோவொரு விதத்தில் தொடர்புடைய அனைத்து உரிமை கோரல்கள், டிமாண்ட்ஸ், இழப்புகள், பொறுப்புகள் மற்றும் செலவினங்கள் (அட்டார்னி ஃபீஸ் உள்ளிட்ட) ஏதோ ஒன்றிலிருந்தும் மற்றும் அனைத்திலிருந்தும் சிஞ்ச் ஃப்யூலுக்கும் மற்றும் அதன் அதிகாரிகள், இயக்குநர்கள், பணியாளர்கள், ஆலோசகர்கள், இணைப்பு நிறுவனங்கள், துணை நிறுவனங்கள் மற்றும் முகவர்களுக்கும் (சிஞ்ச் ஃப்யூல் நிறுவனங்களுடன் சேர்ந்து) இதன்மூலம் இழப்பீடு தர பயனர் ஒப்புதல் தருகிறார்;

சேவைகளையும் அல்லது சேவைகளைப் பயன்படுத்தி கொள்முதல் செய்யப்பட்ட சரக்குகளையும் பயன்படுத்தப் பயனர்களின் அணுகலால் ஏற்படும் (பயனரின் முகவராக, பயனரின் சார்பாக, சிஞ்ச் ஃப்யூலால் கொள்முதல் செய்யப்பட்டது; விவரங்களுக்கு முந்தையதைப் பார்க்கவும்) அல்லது பயன்படுத்தப்பட்டதால் ஏற்பட்டவை;

சேவைகள் அல்லது செயலிகளை அணுகுவதற்காகவோ அல்லது சேவைகளைப் பயன்படுத்துவதற்காகப் பயனர் ஏதேனும் தவறான உரிமை கோரல் மூலம் உரிமம் பெற முயற்சித்தால்;

பயனர் பதிவேற்றம் செய்த, துல்லியமற்ற, தவறான, தவறாக வழிநடத்தும் அல்லது சரியற்ற தகவல்களைப் பகிர்ந்தால்;

இந்த விதிமுறைகளிலோ அல்லது பொருத்தமான சட்டத்திலோ அல்லது ஒழுங்குமுறையிலோ குறிப்பிடப்படும் விதிமுறைகளில், representationல், உத்தரவாதத்தில் அல்லது ஒப்பந்தத்தில் பயனர் செய்யும் மீறல் அல்லது அத்துமீறல்;

பயனரின் உள்ளடக்கத்தை சிஞ்ச் ஃப்யூல் பயன்படுத்துவதால்;

அறிவுசார் சொத்துரிமை அல்லது விளம்பரம், confidential, ஏனைய சொத்து அல்லது தனியுரிமை உரிமை உள்ளிட்ட எந்த மூன்றாவது தரப்பினரின் உரிமைகளையும் பயனர் அத்துமீறுவது;

பயனருக்கும் ஏதாவதொரு மூன்றாம் தரப்பினருக்கும் இடையிலான ஏதாவதொரு தகராறோ அல்லது பிரச்சனையாலோ;

எரிபொருளை டெலிவரி செய்யும் மற்றும் எரிபொருளை transfer செய்யும் நேரத்தில் அந்த இடத்தை/சொத்தை (அசையும் அல்லது அசையா) அணுகுவதற்கான உரிமைகள் மற்றும் பொறுப்புகளால்;.

பயனரின் இழப்பீட்டிற்கு உட்பட்டதல்லாத எந்தவொரு விஷயத்தின் மீதான பிரத்தியேகமான defenceக்கும் மற்றும் கட்டுப்பாட்டிற்குமான உரிமையை சிஞ்ச் ஃப்யூல் தன்வசம் வைத்துள்ளது (அந்த விஷயத்தில் பயனரின் இழப்பீட்டுக் கடப்பாட்டை வரம்பிற்கு உட்படுத்தாமல்.) அதனைச் சொந்த செலவில் ஏற்கிறது. மற்றும் இந்த விஷயத்தில், அந்த உரிமைகோரலில் சிஞ்ச் ஃப்யூல் எடுக்கும் defenceக்கு ஒத்துழைக்கப் பயனர் ஒப்புக்கொள்கிறார்.

வரையறைகள்:

பயனர், என்பது நீங்கள், உங்களுடைய, நுகர்வோர், தனிநபர், நபர், நிறுவனம், party, பயனர், இறுதி-பயனர், வாடிக்கையாளர், client, கொள்முதல் செய்பவர், principal ஆகிய சொற்கள், மொத்தமாகவும் மற்றும்/ அல்லது தனியாகவும், சேவைகளைப் பயன்படுத்துகிற மற்றும் சிஞ்ச் ஃப்யூலால் விவரிக்கப்பட்ட விதத்திலும் அதன் சேவையைப் பயன்படுத்தி கொள்முதல் செய்யப்பட்ட எரிபொருளைப் பெறுபவர் ஆகியனவற்றை ”பயனர்” என்ற சொல் குறிக்கிறது; இந்தியாவில் எரிபொருளைச் (எரிபொருள், HSD மற்றும் மோட்டார் ஸ்பிரிட் உள்ளடங்கியது) சந்தைப்படுத்துவதில் ஈடுபட்டிருக்கும் தனியார் நிறுவனத்தால் நியமிக்கப்பட்ட ஒரு விற்பனையாளர்/முகவர்/விநியோகஸ்தர் மற்றும்/அல்லது அரசாங்க ஏஜென்ஸி அல்லது ஆயில் நிறுவனத்திலிருந்து எரிபொருள் கொள்முதல் செய்வதிலிருந்து தடைசெய்யப்பட்டிருக்கும் தனிநபர் அல்லது நிறுவனம் ஆகியவற்றிலிருந்து குறிப்பாக இவர் தவிர்க்கப்படுகிறார்.

சிஞ்ச் ஃப்யூல்: எங்கள்/நாங்கள்/எங்களுடைய மற்றும் இவற்றின் parents உள்ளிட்ட, துணை நிறுவனங்கள், இணைப்பு நிறுவனங்கள், பணியாளர்கள், ஆபரேட்டர்கள், ஒட்டுமொத்தமாகவோ மற்றும் /அல்லது தனியாகவோ சிஞ்ச் ஃப்யூல் என்ற பொருள்படும் சொற்கள் வரையறுக்கின்றன.

சேவைகள்: எரிபொருள் கொள்முதல் சேவைகள், எரிபொருள் கையகப்படுத்தும் சேவைகள், கமிஷன் ஏஜெண்ட் சேவைகள், வணிக ஏஜெண்ட் சேவைகள் உள்ளிட்டவற்றை சேவைகள் என்ற சொல் வரையறுக்கிறது. மற்றும் முன்னர் கூறப்பட்ட அனைத்தும், கொள்முதல் செய்யும்போதோ மற்றும் ட்ரான்ஸ்போர்ட்டராகவோ, transportation logistics மற்றும் அந்தச் செயல்முறையில் பயனரின் அங்கீகரிக்கப்பட்ட முகவராக சிஞ்ச் ஃப்யூல் செயல்பட்டு ஓர் ஆபரேட்டருடன் இணைந்து எரிபொருள் transfer செய்யும் சேவையோ இவற்றில் ஏதேனும் ஒன்றோ மற்றும் அனைத்துமோ ஒட்டுமொத்தமாகவோ மற்றும்/அல்லது தனியாகவோ ”சேவைகள்” என்று பொருள்படும்.

செயலிகள்: செயலிகள், வலைத்தளங்கள், செயலி, தொலைப்பேசி, ஒட்டுமொத்தமாக மற்றும்/அல்லது தனியாக ‘செயலி’ என்று பொருள் தரும் நோக்கம் கொண்டு வரையறுக்கப்பட்ட சொற்கள்.

முகவர்: தரகு முகவர், வணிக முகவர், பொருட்கள் கொள்முதல் முகவர், பொருட்கள் கையகப்படுத்தும் முகவர், பயனரின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி, இடைத்தரகர், ஆகியன ஒட்டுமொத்தமாகவோ மேலும் அல்லது தனியாகவோ ”முகவர்” என்று பொருள்தரும் நோக்கத்துடன் வரையறுக்கப்படுகின்றன.

கண்டைனர் (கொள்கலன்): பொருளைச் சேகரித்து வைக்க வடிவமைக்கப்பட்ட, ஒரு வாகனத்தின் மீது இறுக்கமாக பொருத்தப்பட்டு ஏற்றி வைக்கப்பட்டிருக்கும், 1000 லிட்டருக்குக் குறைவான கொள்ளளவு கொண்ட ஒன்றை/ தொடர்பானதை வரையறுப்பது.

இந்த விதிமுறைகளில் “உள்ளிட்ட” மற்றும் “உள்ளடக்கு” ஆகிய சொற்கள், “உள்ளடக்கிய, ஆனால், அவை மட்டுமல்ல” என்ற பொருள் கொண்டவை; “சேவைகள்” என்ற சொல் “செயலி” என்பதையும் இன்னபிற என்பதையும் உள்ளடக்கும் பொருள் கொண்டது. மற்றும்/அல்லது செயலியை அணுகியதன் மூலமாகப் பெறப்பட்ட சேவைகள் என்றும் படிக்கப்பட வேண்டும். சேவை மற்றும்/அல்லது செயலி பொருத்தமான இடத்திற்குரியவை; ஏனெனில் இந்த இரண்டும் complementaryயாக இருப்பவை. மற்றும்“சேவைகளை” “செயலி” மூலமாக அணுகமுடியும்.

தகராறு தீர்விற்கான மெக்கானிசம்:

இந்த விதிமுறைகளால் எழும் அல்லது அவற்றுடன் தொடர்புடைய எந்த தகராறும், உரிமை கோரலும், அல்லது சர்ச்சையும் அல்லது அதனால் எழக்கூடிய எந்தவிதமான மீறல், நிறுத்தம், அமலாக்கம், விளக்கம் அல்லது செல்லுபடித்தன்மை அல்லது சேவைகளைப் பயன்படுத்துவதும் (ஒட்டுமொத்தமாக, ”தகராறுகள்”),

முதலில் சிஞ்ச் ஃப்யூல் நிர்வாகத்தின் கவனத்திற்கு, தீர்விற்காக எழுத்துப்பூர்வமாகக் கொண்டுவரப்படவேண்டும். நிர்வாகம் உரிமை கோரலை ஆராய்ந்த பின்னர், இந்த விஷயத்தில் ஒரு முடிவுடன் . அறுபது நாட்களுக்குள் பயனருக்கு பதிலளிக்கும். அவ்வாறு கவனத்திற்குக் கொண்டுவரப்பட்ட ஒவ்வொரு விஷயம் குறித்தும் பயனருக்கு எதிர்க்கருத்துகள் இருந்தால், அத்தகைய முடிவு தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள வழக்கு மன்றங்களின் கூறப்படும் தீர்ப்புக்கு உட்பட்டதாகும் என்பதைப் பயனர் ஒப்புக்கொள்கிறார்,

குறைகள் தீர்ப்பு:

வலைத்தளம், அதன் உள்ளடக்கம் அல்லது சேவைகள் குறித்து பயனருக்கு ஏதேனும் கேள்விகள் அல்லது குறைகள் இருந்தால், சிஞ்ச் ஃப்யூல் வாடிக்கையாளர் சேவையை support@cinchfuel.com என்ற மின்னஞ்சலில் (”குறைதீர்க்கும் அதிகாரி”) பயனர் அணுகலாம். குறைதீர்க்கும் அதிகாரி, அந்த புகார் அல்லது குறையை, அது எழுப்பட்ட தினத்திலிருந்து ஒரு (1) மாதத்திற்குள் நிவர்த்தி செய்ய முயற்சிப்பார்.

இதர ஏற்பாடுகள்:

எதிர்பாரா நிகழ்வு. நிலநடுக்கம், வெள்ளம், தீவிபத்து, புயல், இயற்கைப்பேரழிவு, தெய்வச்செயல், யுத்தம், தீவிரவாதம், ஆயுதம் கொண்டு மோதல்கள், தொழிலாளர் வேலைநிறுத்தம், கதவடைப்பு அல்லது புறக்கணிப்பு போன்ற நிகழ்வுகளின்போது, அதனுடைய கடப்பாடுகளின் செயல்பாடு நிறுத்தப்பட்டாலோ, தடைப்பட்டாலோ, அல்லது தாமதம் ஏற்பட்டாலோ அதற்கு சிஞ்ச் ஃப்யூல் பொறுப்பல்ல. சிஞ்ச் ஃப்யூல் எந்த நேரத்திலும், அதன் சொந்த விருப்பத்தின்படி, முன்கூடிய அறிவிப்பு ஏதும் உங்களுக்குக் கொடுக்காமல் வலைத்தளத்தின் இயக்கத்தையும் சேவைகள் அளிப்பதையும் நிறுத்தி வைக்கலாம்.

முழு ஒப்பந்தம்: இந்த ஒப்பந்தம், வலைத்தளத்தைப் பயன்படுத்துவது தொடர்பாக உங்களுக்கும் சிஞ்ச் ஃப்யூலுக்கும் இடையிலான முழு ஒப்பந்தத்தையும் உள்ளடக்கியது.

விலக்கு இல்லை: இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையிலான எந்த உரிமையையோ அல்லது ஏற்பாட்டையோ கையாளுவதிலோ அல்லது செயற்படுத்துவதிலோ ஏற்படும் தாமதமோ அல்லது தோல்வியோ, அத்தகைய உரிமையை அல்லது ஏற்பாட்டைக் கைவிடுதல் என்பதாகாது.

அறிவிக்கைகள்: பயனருக்கு சிஞ்ச் ஃப்யூலோ அல்லது சிஞ்ச் ஃப்யூலுக்கு ஒரு பயனரோ அல்லது வேறொரு பயனருக்கோ கொடுக்கும் அனைத்து அறிவிப்புகளும் எழுத்துப்பூர்வமாக, ஆங்கில மொழியில் இருக்கவேண்டும். அத்தகைய அறிவிப்பு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட வேண்டும்; அல்லது சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட, முன்பணம் செலுத்தப்பட்ட கூரியர் சேவை மூலம், கீழே கொடுக்கப்பட்ட முகவரிக்கு, அல்லது இருதரப்பாரும் தெரிவித்திருக்கும், மாற்றப்பட்ட முகவரிக்கு அனுப்பவேண்டும்.

சிஞ்ச் ஃப்யூல் தொடர்புக்கு:

[புது எண் 9, பழைய எண் 11, முதல் தளம், பாளையக்காரன் தெரு, கலைமகள் நகர், ஈக்காட்டு தாங்கல், சென்னை – 600 032]

support@cinchfuel.com

பயனருக்கு அறிவிக்கை:

வலைத்தளத்தில் பதிவு செய்யும்போது நீங்கள் அளித்த மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்.

Governing Law; அதிகார வரம்பு. இந்த ஒப்பந்தம் ஆகியன பின் கூறப்படும் (ஆனால், அவை மட்டுமே அல்ல) இந்தியச் சட்டங்களின் விதிகளின்படி நிர்வகிக்கப்படுகிறது.

இந்திய ஒப்பந்தச் சட்டம், 1872.

(இந்திய) தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000;

(இந்திய) தகவல் தொழில்நுட்ப (நியாயமான பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் செயல்முறைகள் மற்றும் உணர்வு பூர்வமான தனிநபர் தகவல்) விதிகள், 2011; மற்றும் (இந்திய) தகவல் தொழில்நுட்ப (இடைத்தரகர்கள் வழிகாட்டும் நெறிமுறைகள்) விதிகள், 2011.

இந்த வலைத்தளம் தமிழ்நாடு மாநிலம், சென்னையிலிருந்து தொடங்கப்பட்டிருக்கிறது. சென்னை-தமிழ்நாட்டில் பொருந்தக்கூடிய சட்டங்களால் இந்த ஒப்பந்தம் நிர்வகிக்கப்படுகிறது. இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், இந்த ஒப்பந்தத்தின் கீழ் அல்லது அதன் காரணமாக, எழும் எந்தவொரு நடவடிக்கை, வழக்கு, சட்ட நடவடிக்கைகள் அல்லது உரிமை கோரல்கள் தொடர்பான அதிகார வரம்பிற்கும் மற்றும் இந்தியா-சென்னையில் அமைந்திருக்கும் வழக்கு மன்றங்களுக்கும் நீங்கள் ஒப்புதல் அளிக்கிறீர்கள்.

ஒப்பந்த முடிவு:

இந்த ஒப்பந்தத்தின் விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் நீங்கள் மீறிவிட்டதாக சிஞ்ச் ஃப்யூல் நியாயமாக நம்பினால், உங்களுக்கு எவ்வித அறிவிப்பும் தராமல் அதன் சொந்த விருப்பத்தின்படி வலைத்தளத்தை நீங்கள் அணுகுவதை அது முடிவுக்கு கொணரமுடியும்.

Get Order Now